Police Recruitment

தவறிய குழந்தையை சில மணிநேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த விருதுநகர் மாவட்ட போலீசார்.

தவறிய குழந்தையை சில மணிநேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த விருதுநகர் மாவட்ட போலீசார். விருதுநகர் மாவட்டம் 07.03.2020 சிவகாசியில் உள்ள முருகன் கோயில் அருகில் ஒரு குழந்தை தனியாக நின்று கொண்டிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, அருகில் பணியிலிருந்த சிவகாசி டவுண் போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. ராமச்சந்திரன் மற்றும் போக்குவரத்து பெண் தலைமை காவலர் திருமதி. முருகேஸ்வரி ஆகியோர் குழந்தையை பத்திரமாக மீட்டு துரிதமாக செயல்பட்டு குழந்தையின் பெற்றோரை கண்டுபிடித்து நல்ல முறையில் ஒப்படைத்தனர்.

Police Department News

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை..!! சிவகங்கை மாவட்ட காவல்துறையினர்

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை..!! சிவகங்கை மாவட்ட காவல்துறையினர். குழந்தை தொழிலாளர் (1986 ஆண்டு) சட்டத்தில் படி வீட்டு வேலை, உணவு நிர்வாகம், சிற்றுண்டி சாலை ,டீ கடை, வெவ்வேறு உணவு நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்துவது சட்டப்படி குற்றம். இச்சட்டத்தினை மீறும் உரிமையாளர்களுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூபாய் 20,000 முதல் 50,000 ஆயிரம் […]

Police Department News

மணல் மாபியாக்கள் கைது செய்த காவல்துறை…!

மணல் மாபியாக்கள் கைது செய்த காவல்துறை…! 07.03.2020-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் அருகே உள்ள செங்கமடை பகுதியில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளுவதாக திருமதி.முனீஸ்வரி VAO அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பிரதீப் ராஜா, அருண்குமார் ஆகிய இருவரையும் SI திரு.செல்லச்சாமி அவர்கள் U/s 379 IPC r/w 21(4) Mines and Minerals Act-ன் கீழ் கைது செய்தார். மேலும், மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய இரண்டு டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டன.

Police Department News

தற்காப்பு கலையால் இளைஞரிடமிருந்து தப்பித்த பள்ளிச் சிறுமி: கற்றுக்கொடுத்த பெண் ஆய்வாளர், சிறுமிக்கு ஆணையர் வெகுமதி

பள்ளியில் பெண் ஆய்வாளர் கற்றுக்கொடுத்த தற்காப்பு கலையால் கத்தியால் தாக்க முயன்ற இளைஞரை தாக்கி தப்பித்த சிறுமி, அவருக்கு கற்றுக்கொடுத்த பெண் ஆய்வாளர் இருவரையும் நேரில் அழைத்து காவல் ஆணையர் பாராட்டி வெகுமதி அளித்தார். சென்னை, அமைந்தகரையைச் சேர்ந்த 13 வயது சிறுமி மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அமைந்தகரையைச் சேர்ந்த நித்யானந்தம்(26) என்பவர் சிறுமியை காதலிக்குமாறு அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமி கடந்த 04-ம் தேதி அன்று […]

Police Department News

தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது..!!

தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது..!! நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு செ.செல்வநாகரத்தினம்.இகாப அவர்களின் பரிந்துரையின் பேரில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவுபடி தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவோர் மீது குண்டர் தடுப்புக்காவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த வெளிப்பாளையம் காவல் சசரகத்திற்கு உட்பட வண்டிப்பேட்டையை சேர்ந்த வீரையன் மகன் சிவன்பாண்டி […]

Police Department News

ஆட்டோ டிரைவரின் அசத்தலான செயல்..!

ஆட்டோ டிரைவரின் அசத்தலான செயல்..! ஆட்டோவில் தவறவிட்ட பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை பாராட்டிய காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீசார். காரைக்குடி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கலைஞர் என்பவர் 04.03.2020 தனது ஆட்டோவில் பயணி ஒருவர் தவறவிட்ட மணி பர்சை கண்டு அதனை சோதனை செய்ததில் அதில் ரூ 32,500/-மற்றும் அடையாள அட்டை இருப்பதை பார்த்து உடனடியாக காரைக்குடி வடக்கு காவல் நிலைய SI திரு. சரவண போஸ் அவர்களிடம் ஒப்படைத்தார். இந்த […]

Police Department News

வழக்கரிஞர் கொலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தும் காவல்துறை..!!

கம்பம் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் தனது இருசக்கர வாகனத்தில் பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை வெட்டி வீழ்த்தியது. அவரை சாலையில் ஓட ஓட விரட்டி கொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றது தகவல் அறிந்து வந்த காவல்துறை உடலை கைபற்றி தனிப்படை அமைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Police Department News

புதுச்சேரி கல்வி அமைச்சரின் செல்போன் பறிப்பு வழக்கு: ஒருவர் கைது

புதுச்சேரியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட கல்வி அமைச்சரின் செல்போனைப் பறித்துச் சென்ற வழக்கில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். புதுச்சேரி கல்வி அமைச்சராக உள்ள கமலக்கண்ணன், காரைக்காலைச் சேர்ந்தவர். இவர் புதுச்சேரி வரும்போது தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இல்லத்தில் தங்குவது வழக்கம். அமைச்சர் கமலக்கண்ணன் கடந்த 2-ம் தேதி இரவு கடற்கரை சாலையில் செல்போனில் பேசியபடி நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவர் அமைச்சரின் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான […]

Police Department News

விருதுநகரில் விபத்தில் பலியான காவலர் குடும்பத்திற்கு ரூ.2.50 லட்சம் நிதியுதவி: சக காவலர்கள் வழங்கினர்

விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு சக காவலர்கள் ரூ.2.50 லட்சம் நிதியுதவி அளித்தனர். மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள எம்.சுக்குலாபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்பாண்டி (32). விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரி 10-ம் தேதி விடுப்பிலிருந்த காவலர் கார்த்திக்பாண்டியும் அவரது நண்பர் ஜெயபாண்டி (34) என்பவரும் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை நோக்கி பைக்கில் சென்றபோது எதிரே வந்த பைக் மோதி […]

Police Department News

மாவட்ட அளவில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சியில் முதல் பரிசு பெற்ற ராமநாதபுரம் போலீசார்

மாவட்ட அளவில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சியில் முதல் பரிசு பெற்ற ராமநாதபுரம் போலீசார். சென்னை ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சி பள்ளியில் 10.02.2020 முதல் 29.02.2020 வரை நடைபெற்ற பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சியில் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக ஆயுதப்படை காவலர்கள் திரு.விக்னேஸ்வரன் PC 711, திரு.முத்தமிழன் PC 591, திரு.கார்த்திக் PC 574, திரு.ராஜபாண்டி PC 722, திரு.கபில்தேவ் PC 696 ஆகியோர் கலந்து கொண்டனர். 12 கடலோர காவல் மாவட்டங்கள் கலந்துகொண்ட […]