பொங்கல் பண்டிகையின்போது சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்த போலீஸாருக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் தலா ஒரு தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. இதேபோல், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையுள்ள சர்வீஸ் சாலை நுழைவாயில்களில் 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், இங்கு அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவக் குழுவினர் […]
Author: policeenews
குடியரசு தின விழாவை ஒட்டி மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையம் 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் காரணமாக பார்வையாளர்கள் வரும் ஜனவரி 31-ம் தேதி வரை விமான நிலைய உள் வளாகத்திற்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் உமா மகேஸ்வரன் தலைமையில் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியா குடியரசாகி 70-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள விமான […]
கேட்பாரற்று கிடந்த 17 பவுன் தங்க நகைகளை போலீஸில் ஒப்படைத்த பெண்: காவல் துறையினர் பாராட்டு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 17 பவுன் தங்க நகைகளை கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணை காவல் துறை அதிகாரிகள் பாராட்டினர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பேருந்து நிலையம் அருகே நேற்றிரவு (ஜன.19) 17 பவுன் தங்க நகைகள், 500 ரூபாயுடன் கைப்பை ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது. இதை அவ்வழியே சென்ற திருமயத்தைச் சேர்ந்த நாடியம்மாள் என்பவர் எடுத்து திருமயம் ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து, அவர்கள் நகைகளை திருமயம் காவல் நிலையத்தில் சிக்கந்தர் […]
ஒத்திகையே இப்படி..! அசரவைக்கும் தமிழக காவல்துறை..! (படங்கள்)
ஒத்திகையே இப்படி..! அசரவைக்கும் தமிழக காவல்துறை..! (படங்கள்) ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழக காவல்துறை மற்றும் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் நடைபெறவிருக்கும் குடியரசு தின அணிவகுப்புக்கான ஒத்திகை இன்று நடைபெற்றது. சென்னை, மெரினா அருகிலுள்ள காமராஜர் சாலையில் நடைபெற்ற ஒத்திகையில் காவல்துறையின் குதிரை படை அணிவகுப்பு, போக்குவரத்து காவல்துறையின் அணிவகுப்பு, காவல்துறையின் பெண்கள் பிரிவின் அணிவகுப்பு,என பல்வேறு நிகழ்வுகள் ஒத்திகைப் […]
சிதம்பரம் கோவிலில் உண்டியல் உடைப்பு.. லட்சக்கணக்கில் கொள்ளை!
சிதம்பரம் கோவிலில் உண்டியல் உடைப்பு.. லட்சக்கணக்கில் கொள்ளை! கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் உள்ள சிறப்புவாய்ந்த கோவில்களில் தில்லை அம்மன் கோவிலும் ஒன்று. நடராஜர் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் தில்லையம்மன் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வார்கள். இதனால் இந்த கோயிலில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும் ஒவ்வொரு நாளும் ராகு காலத்தில் இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடப்பதால் சிறப்பாக இருக்கும். இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பக்தர்கள் காணிக்கைகளை உண்டியலில் […]
தவறான தொடர்பால் நிகழ்ந்த கொலை சம்பவம்; முன்னாள் ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது!
தவறான தொடர்பால் நிகழ்ந்த கொலை சம்பவம்; முன்னாள் ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது! கிருஷ்ணகிரி அருகே, தனது மனைவியுடன் தவறான தொடர்பு வைத்திருந்த வேன் ஓட்டுநரை பாறாங்கல்லால் தாக்கி கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (30). வேன் ஓட்டுநர். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பொங்கல் பண்டிகையையொட்டி, விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தார். […]
கண்காணிப்பு பணியில் தொய்வு 4 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்.
கண்காணிப்பு பணியில் தொய்வு 4 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம். வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய நிலையில், கண்காணிக்க தவறியதாக, இரு எஸ்.எஸ்.ஐ., இரு ஏட்டுகள், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.சேலம், கன்னங்குறிச்சியில், கடந்த, 14, 15ல், ஏரிக்கரை சாலை, ராமநாதபுரம் கிழக்கு தெரு பகுதிகளில், வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, நகை, பணம், மடிக்கணினி ஆகியவை கொள்ளைபோனது. இதுகுறித்து, நேற்று வரை, கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு, ஐந்து புகார்கள் வந்தன. இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி, வாகன தணிக்கை, குற்றவாளிகளை கண்காணிப்பதில் தொய்வு […]
எஸ்.ஐ. யை தாக்க முயன்றவர் கைது.
எஸ்.ஐ. யை தாக்க முயன்றவர் கைது. ஆரோவில் அருகே சப் இன்ஸ்பெக்டரை திட்டி, தாக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ஆரோவில் சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் நேற்று பொம்மையார்பாளையம் இ.சி.ஆர்., சாலையில் வாகன தணிக்கை செய்தார். அப்போது, பைக்கில் வந்த நபரை நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமாரை திட்டி, தாக்க முயன்றார். உடன், அங்கிருந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், பொம்மையார்பாளையத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் பசுபதி என்கிற பச்சையப்பன், 26; […]
பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திருஅ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 17.01.2020 அன்று சென்னை தீவுத்திடலில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலா பொருட்காட்சியகத்தை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திருஅ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 17.01.2020 அன்று சென்னை தீவுத்திடலில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலா பொருட்காட்சியகத்தை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலா பொருட்காட்சியகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திருஅ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 17.01.2020 அன்று காவலர்களின் பணி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கும், […]
சென்னையில் போலீஸ் அதிகாரிகளைப்போல் நடித்து நூதன முறையில் 4 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் போலீஸ் அதிகாரிகளைப்போல் நடித்து நூதன முறையில் 4 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த தினேஷ் குமார் என்ற இளைஞர், கடந்த 10ம் தேதி சென்னையில் 4 கிலோ தங்க கட்டிகள் வாங்கியுள்ளார். அவரை பிந்தொடர்ந்த மர்மநபர்கள் 4 பேர் டெல்லி போலீஸ் அதிகாரிகளைப் போல் நடித்து நூதன முறையில் 4 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர். சென்னை யானைகவுனி காவல் நிலையத்தில் தினேஷ் […]