காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்டம்,அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16.11.2019 அன்று மாலையில், பொதுமக்கள் அதிகளவில் கூடும், முக்கிய சாலை சந்திப்புகள், வணிக கடைவீதிகள் உள்ளிட்ட பொதுமக்களின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில், தலைக்கவசம் அணிதலின் அவசியம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது, சாலை பாதுகாப்பு விதிகளை கடைப்பிடித்தால் ஏற்படும் பாதுகாப்பான வாழ்க்கை, அதிவேகத்தில் வாகனத்தை இயக்குவதால் ஏற்படும் விபத்துக்கள், மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவதால் நேரிடும் விபத்துக்கள், அதிக பாரம் ஏற்றிச் செல்வதால் ஏற்படும் […]
Author: policeenews
“PREVENTION OF CHILD ABUSE DAY” முன்னிட்டு சென்னை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் எழும்பூரில் மாநில அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து சிறப்பரையாற்றினார்.
நேற்று 19 11 2019 Prevention of child abuse day முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற பிரிவு சார்பாக மாநில அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி எழும்பூரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் ஆணையாளர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்கினார். திருமதி.H.ஜெயலட்சுமி, காவல் துணை ஆணையாளர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு அவர்கள், பள்ளியின் […]
சொத்து பிரச்சனை சம்பந்தமாக தற்கொலைக்கு முயன்ற தாய் மற்றும் 2 குழந்தைகளை காப்பாற்றிய காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னை, பெரவள்ளூர், SRB வடக்கு தெருவில் வசித்துவரும் மாலா வ/38, க/பெ.முருகன் என்பவர் தனது 16 வயது மகள் மற்றும் 13 வயது மகனுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு சொத்து சம்மந்தமாக மாலாவின் கணவருடன் பிறந்த 4 அக்கா, 2 அண்ணன் ஆகியோருக்குமிடையே பிரச்சினை இருந்து வருகிறது. இது சம்மந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், கடந்த 17.11.2019 அன்று மதியம் 3.30 மணியளவில் மேற்படி மாலா தனது மகன் மற்றும் மகளுடன் தற்கொலை செய்யும் […]
ஆட்டோவில் அடையாளம் தெரியாத நபர் விட்ட சென்ற பையை நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு
ஆட்டோவில் அடையாளம் தெரியாத நபர் விட்ட சென்ற பையை நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். கொடுங்கையூர், முத்தமிழ் நகர், 4-வது பிளாக், என்ற முகவரியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் திரு.D.முரளி வ/56, த/பெ. துரைசாமி என்பவர் கடந்த 16.11.2019 அன்று 11.30 மணியளவில் F-2 எழும்பூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட காந்தி இர்வின் சாலையில் உள்ள பழைய […]
இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை தருவதாகக் கூறி போலி விளம்பரம் செய்து ரூ.5 கோடி அபகரிக்க முயன்ற பொறியாளர் உட்பட 2 பேர் கைது
இன்போசிஸ் நிறுவனத்தின் பெயரில் போலியான விளம்பரம் செய்து ரூ.5 கோடி வரை அபகரிக்க முயன்ற பெண் பொறியாளர் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த சுகுமாறன் மனைவி மகேஷ்வரி (35). பிஇ பட்டதாரி. இவர், இன்போசிஸ் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிய பயிற்சி கட்டணத்துடன் ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக கடந்த வாரம் செய்தித்தாள் ஒன்றில் விளம் பரம் செய்திருந்தார். இதற்காக தல்லாகுளம் பகுதியிலுள்ள பிரபல ஓட்டல் ஒன்றுக்கு நவ.16 அன்று […]
ரயில் பயணிகளிடம் திருட்டு; 71 வழக்குகளில் சம்பந்தப்பட்ட இளம்பெண் கைது: 70 சவரன் நகை பறிமுதல்
ரயில் பயணிகளின் கவனத்தைத் திசை திருப்பி நகை, பணத்தைத் திருடிய 57 வழக்குகளில் சம்பந்தப்பட்ட இளம்பெண்ணை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 70 சவரன் நகை, 77.5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்தனர். ரயிலில் வரும் பயணிகளிடம் சாதுர்யமாகப் பழகி அவர்கள் பணம், நகைகளைத் திருடுவதாக ரயில்வே போலீஸாருக்குத் தொடர் புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இதையொட்டி தீவிரக் கண்காணிப்பில் இருந்த ரயில்வே போலீஸாரிடம், கடந்த வாரம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் […]
கொலை, கொள்ளை வழக்குகளில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் சென்னையில் கைது: 15 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்
பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷை புளியந்தோப்பு போலீஸார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். சென்னை புளியந்தோப்பு, நரசிம்ம நகர், 3-வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் என்ற ஆற்காடு சுரேஷ் (40). பிரபல ரவுடியான இவர் மீது வழக்கறிஞர் பகத்சிங் கொலை வழக்கு, ரவுடிகள் ராதாகிருஷ்ணன், சின்னா ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கு உட்பட 6 கொலை வழக்கு, 25 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவை தவிர ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளும் உள்ளன. கூலிப்படை தலைவ னாகவும் […]
மதுரையில் ரூ.7.62 லட்சம் கள்ளநோட்டு சிக்கியது
மதுரையில் ரூ.7.62 லட்சம் மதிப் புள்ள கள்ளநோட்டு பண்டலை வீசிச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் வெளியூரில் இருந்து வந்த லாரியில் இருந்து குடிநீர் பாட்டில்களை இறக்கிக் கொண்டிருந்தனர். ரயில் நிலையம் அருகே லாரி நின்றிருந்தபோது, அந்த வழியாகச் சென்ற ஒருவர் திடீரென கையில் வைத்திருந்த பண்டல் ஒன்றை லாரிக்குள் வீசி விட்டு தப்பினார். இதைக் கவனித்த லாரி ஓட்டுநர் பூபதி, அந்த பார்சலை […]
கோவை பீளமேட்டில் 2003-ம் ஆண்டு நடந்த மூவர் கொலை வழக்கில் மீண்டும் விசாரணை?
கோவை பீளமேடு சவுரிபாளை யம் சாலையை சேர்ந்தவர் அமிர்தம் (55). இவரது மகள் கீதாமணி(30), கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து, தாய் மற்றும் மகள் ரஞ்சனி(3)யுடன், மேற்கண்ட முகவரியில் வசித்து வந்தார். கடந்த 2003-ம் ஆண்டு மார்ச் மாதம், அமிர்தம், கீதாமணி, ரஞ்சனி ஆகியோர் கத்தியால் குத்தப்பட்டும், கழுத்தை நெரித்தும் கொல்லப்பட்டனர். வீட்டில் இருந்த 8 பவுன் நகை மாய மாகியிருந்தது. அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்ப வம் தொடர்பாக, ஆதாயக் […]
அமராவதி ஆற்றின் கரையோரத்தில் இளம்பெண் கழுத்து நெரித்து கொலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் சென்று ஆய்வு செய்தார்.
மூலனூர் அருகே இளம் பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர். திருப்பூர் மாவட்டம் மூலனூர் காவல் எல்லைக்கு உட்பட்ட மாலமேடு கவுண்டப்ப கவுண்டனூர் அருகே இளம் பெண் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு போலீஸார் சென்று ஆய்வு செய்தனர். இதில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வாயில் துணியை வைத்து அழுத்தியும், துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும் கொலை செய்யப்பட்டு, முட்புதரில் உடல் வீசப்பட்டுக் […]