06.12.19 திண்டுக்கல் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களை போதை பழக்கத்திற்கு உட்படுத்தி மாணவர்களின் வாழ்வை சீரழித்து வந்த கஞ்சா விற்பனையாளர்களின் சட்டவிரோத செயல்களை ஒடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் தனிப்படையினர் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையச்சரகம் அனுமந்தராயன்கோட்டை கிராமம் சாமியார்பட்டி கிராமத்தில் சிலர் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்களின் உத்தரவுப்படி தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் திரு.மாரிமுத்து மற்றும் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.இளஞ்செழியன் ஆகியோர் தலைமையில் தனிப்படை காவலர்கள் அடங்கிய குழு மேற்படி கிராமத்தில் மூக்காண்டி தேவர்மகன் போஸ் என்பவரது தகர செட்டினை தணிக்கை செய்ய அந்த இடத்தில் சுமார் 213 கிலோ கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இதில் சம்பந்தப்பட்ட எதிரிகள் 1) போஸ் (60), 2) மணிமாறன் (28), 3) நாகராஜ் (31), 4) செல்வி (41), 5) முருகன் (28) ஆகியோரை கைது செய்தும், எதிரிகள் கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட மூன்று இருசக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டு எதிரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேற்படி சட்டவிரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த எதிரிகளை கைது செய்த தனிப்படையினரை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். மேலும் இதுபோன்று சட்டவிரோதமாக திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.