
திருச்சி மத்திய மண்டலத்தில், நடப்பாண்டில், 17 கொலை வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு தண்டனை பெற்றுத்தந்த புலன் விசாரணை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள், சாட்சியங்கள் அழைக்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில், திருச்சி மத்திய மண்டல டிஐஜி பாலகிருஷ்ணன், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், சாட்சிகள் பாராட்டப்பட்டதுடன், காவல்துறையினருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி பாலகிருஷ்ணன், திருவெறும்பூர் பெல் கூட்டுறவு வங்கி கொள்ளை வழக்கில், 75 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்றும், வங்கி ஊழியர்களிடம் 2ஆம் கட்ட விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் A.உமேஷ்