திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன் ஐபிஎஸ் தலைமையில் நேற்று (12/11/2019) நிறுவனங்களின் மேலாளர்கள் உடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். அதில், குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் கூடாது, CCTV கேமரா நிறுவனங்களை சுற்றி அமைக்க வேண்டும், சாலை விதி கடைபிடிப்பு போன்றவற்றை விவாதித்து , தேவையான அறிவுரைகளை வழங்கினார் போலீஸ் இ நியூஸ் திருவள்ளூர் மாவட்ட நமது செய்தியாளர் R. விஷால்
Author: policeenews
தந்தை மரணத்தால் தூக்கில் தொங்கிய மகன்; தோள் கொடுத்து மீட்ட நண்பன்! நெகிழவைத்த 13 வயது சிறுவன்
. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பேரையூர் கிராமத்தின் அருகில் உள்ளது கருங்குளம் கிராமம். இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வரும் மாணவர் ஒருவரின் தந்தை, உடல்நலக் குறைவால் சமீபத்தில் உயிரிழந்தார். சிறுவன் வடிவேலனுக்குப் பாராட்டு தன் தந்தையின் பிரிவினைத் தாங்கிக்கொள்ள முடியாத சோகத்துடன் திங்கள்கிழமை காலை பள்ளிக்கு வந்துள்ளார் மாணவர். வகுப்பறைக்கு வந்த பின்னரும் தனது தந்தையை நினைத்தபடியே சோகத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த […]
போலி சான்றிதழ் வழங்கிய இரண்டு வக்கீல்கள் கைது
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கல்லூரணியை சேர்ந்த கலையரசன் இவரது நிலத்தின் அடமான பத்திரம் தொலைந்து போனதாக புகார் கொடுக்க இளையான்குடி காவல் நிலையத்திற்கு சென்றபோது காவல் நிலைய வாசலில் அவரை சந்தித்த 2 வக்கீல்களான, கலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாலையா மற்றும் பாத்திமா நகரைச் சேர்ந்த பாண்டியன் இருவரும் சேர்ந்து எங்களிடம் ரூ.10000/- கொடுத்தால் புதுபத்திரம் ஏற்பாடு செய்து தருவதாக கூறினார். இதை நம்பிய கலையரசன்ரூ10000/- கொடுத்துள்ளார். அவர்கள் கொடுத்த புதுபத்திரத்தை சார்பதிவாளரிடம் காண்பித்தபோது போலி […]
மடிக்கணினி வழங்காததால் பள்ளி மாணவிகள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்…
…விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புகழ் பெற்ற பெண்கள் மேல்நிலைபள்ளி இயங்கிவருகிறது,இதே பள்ளியில் பயின்ற முன்னால் மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்குவதற்காக மாணவிகளிடம் ஆதார் ஜெராக்ஸ் பெற்ற பள்ளி நிர்வாகம் தற்ச்சமயம் மாணவிகளுக்கு மடிக்கணினி இல்லை என்று தெரிவித்தனர் இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் பள்ளி முன்னால் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,இதனால் பள்ளி வளாகத்தில் சிறிது சல சலப்பு ஏற்பட்டது தகவல் அறிந்த காவல் துறையினர் பள்ளிக்குச்சென்று மாணவிகளிடமும் பள்ளி நிர்வாகத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர் பின்பு மாணவிகளிடம் உரிய முறையில் எடுத்துக்கூறி […]
விருதுநகரில் முன் விரோத பகையின் காரணமாக அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்,கொலைக்கு காரணமாக இருக்கின்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர், அதன் விபரம் பின் வருமாறு…
விருதுநகர் மாவட்ட செய்திகள்: -விருதுநகர் அல்லம்பட்டி அண்ணா புதுத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல் ராஜன் (44)இவர் கட்டிட கட்டுமான பொருள்களை விற்பனை செய்து வருகிறார் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலையும் செய்து வந்தார், அதிமுகவில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவருக்கு மாணவரணி அவைத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது. இவரக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே வந்த சண்முகவேல் ராஜனை வீட்டு வாசலில் வைத்து மர்ம கும்பல் […]
இராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளநோட்டுகளுடன் இலங்கை அகதி ஒருவர் கைது.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை தனிப்பிரிவிற்கு வந்த இரகசிய தகவலின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்பேரில் சார்பு-ஆய்வாளர் திரு.செந்தில்குமார் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. உளவுத்துறையின் உதவியோடு, தனிப்படை சந்தேகப்படும் நபர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வந்தது. மேலும் கூடுதலாக மாவட்ட காவல்துறை அறிமுகப்படுத்திய பிரத்யேக கைபேசி எண் 9489919722-ல் பல தகவல்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. அதன் அடிப்படையில் 11.11.2019-ம் தேதி சார்பு ஆய்வாளர் திரு.செந்தில்குமார் தலைமையில் தனிப்படை போலீஸார் மண்டபம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட […]
காசி மேட்டை கலக்கும் சிவகங்கை காரர், திரு. சிதம்பரமுருகேசன் ஆய்வாளர் அவர்கள்.
இன்ஸ்பெக்டர் இடமாற்றம்; கலங்கிய பெண்கள்! – மக்கள் மனதில் இடம்பிடித்த ஆய்வாளர் சிதம்பரமுருகேசன் அவர்களின் சீக்ரெட் காவல்நிலையங்களால் அலைக்கழிக்கப்படும் எளிய மனிதர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த இன்ஸ்பெக்டர் சரியில்லை, உடனே இடமாற்றம் செய்யுங்கள்’ எனப் போராடிய மக்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால்,காசிமேடு இன்ஸ்பெக்டர் சிதம்பரமுருகேசனை இடமாற்றம் செய்யக்கூடாது’ என அப்பகுதி பெண்கள் திரண்டு சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. `அப்படி என்னதான் சாதித்தார் சிதம்பர முருகேசன்?’ என சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் கேட்டோம். “இரவு நேரங்களில் […]
புற்றுநோய் பாதித்தவர்களுக்கு உதவ தலைமுடியை வழங்கிய பெண் போலீஸ் அதிகாரி
கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் அபர்ணா லவக்குமார். இவர் திருச்சூர் இரிஞ்ஞாலகுடாவில் மூத்த சிவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். நெருக்கடியான வேலைகளுக்கு இடையேயும் இவர் பள்ளி மாணவர்களிடம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியைச் செய்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் ஒரு பள்ளிக்கு சென்றபோது புற்றுநோய் பாதிப்புக்குள்ளான 5-ம் வகுப்பு மாணவனை அபர்ணா சந்தித்தார். அப்போது அந்தச் சிறுவன் புற்றுநோய்க்கான ‘கீமோதெரபி’ சிகிச்சையால் தலைமுடி முழுவதையும் இழந்திருப்பதைப் பார்த்தார். இதைத் தொடர்ந்து அபர்ணா, தனது நீண்ட தலைமுடியை […]
மண்டபம் அருகே ரூ.1 லட்சம் கள்ள நோட்டுகளுடன் இலங்கை அகதி கைது!
இலங்கை மன்னார் மாவட்டம் பதினாறாம்கட்டை சித்திரை குமார் மகன் முரளிதரன் (எ) அருண் (24). அகதியாக தமிழகம் வந்த அருண், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அகதிகள் முகாமில் தங்கியுள்ளார்.இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள அவரது உறவினரை சந்திக்க இன்று காலை வந்த இவர், மண்டபம் அருகே சுடுகாடு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த கியூ பிரிவு போலீசார் , அருணை பிடித்து விசாரித்தனர். சோதனையில் […]
கூலிப்படையில் இணையச் சொன்னேன்; கேட்காதததால் சுட்டுக்கொன்றேன் : பாலிடெக்னிக் மாணவர் கொலை வழக்கில் குற்றவாளி வாக்குமூலம்
வண்டலூரை அடுத்த நல்லாம்பாக்கத்தில் பாலிடெக்னிக் மாணவரை சுட்டுக்கொன்ற கொலையாளி அளித்த வாக்குமூலத்தில் கூலிப்படையில் சேர அழைத்ததாகவும் வராததால் ஆத்திரத்தில் சுட்டுக்கொன்றேன் என தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த வேங்கடமங்களம் பஜனைக்கோவில் தெரு, பகுதியைச் சேர்ந்தவர் ஷோபனா (42). இவரது மூத்த மகன் முகேஷ் (19) தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் EEE 3-ம் ஆண்டு படித்து வந்தார். முகேஷின் நெருங்கிய நண்பர் விஜய் (19). சிறுவயது முதல் ஒன்றாகப் பழகிவந்த விஜய்யும் முகேஷும் பால்ய நண்பர்கள். எங்கு […]