Police Department News

காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினருக்கான கடவுச்சீட்டு முகாம் நடத்தி 10,968 கடவுச்சீட்டுகளை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கிய மண்டல கடவுச்சீட்டு அலுவலக ஊழியர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு பாராட்டு விழா.

காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினருக்கான கடவுச்சீட்டு முகாம் நடத்தி 10,968 கடவுச்சீட்டுகளை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கிய மண்டல கடவுச்சீட்டு அலுவலக ஊழியர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு பாராட்டு விழா.

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனை கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் சீரிய முயற்சியின் காரணமாக காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான கடவுச்சீட்டு முகாம் (PASSPORT MELA FOR POLICE PERSONNEL & THEIR FAMILY) கடந்த 18.10.2019 முதல் 09.11.2019 காவல் ஆணையரகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்றது. சென்னை மண்டல கடவுச்சீட்டு அதிகாரி திரு.P.K.அசோக் பாபு, I.F.S., அவர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் இணைந்து இம்முகாமினை துவக்கி வைத்தனர்.

இம்முகாமில் பெறப்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பங்களை மண்டல கடவுச்சீட்டு அதிகாரிகள் பரிசீலனை செய்து 3,891 காவல் ஆளிநர்கள், 7,077 காவலர் குடும்ப உறுப்பினர்கள் என மொத்தம் 10,968 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

27.11.2019 அன்று மாலை சுமார் 5.00 மணியளவில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் மண்டல கடவுச்சீட்டு அலுவலக ஊழியர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் கடவுச்சீட்டு முகாமை சிறப்பாக நடத்தி கடவுச்சீட்டுகளை விரைவாக வழங்கிய கடவுச்சீட்டு அலுவலக ஊழியர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் கடவுச்சீட்டு பிரிவு காவல் ஆளிநர்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மண்டல கடவுச்சீட்டு அதிகாரி திரு.P.K.அசோக் பாபு, I.F.S., அவர்கள், காவல் கூடுதல் ஆணையாளர்கள் திரு.ஆர்.தினகரன், இ.கா.ப, (வடக்கு) திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப, (தெற்கு), காவல் இணை ஆணையாளர்கள் திரு.எழில்அரசன், இ.கா.ப, (போக்குவரத்து தெற்கு) திருமதி.எம்.வி.ஜெயகௌரி, இ.கா.ப, (போக்குவரத்து வடக்கு) திரு.ஏ.ஜி.பாபு, இ.கா.ப (தலைமையிடம்) நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர் திரு.ஆர்.திருநாவுக்கரசு, இ.காப, கடவுச்சீட்டு அலுவலக ஊழியர்கள், மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.

Leave a Reply

Your email address will not be published.