சென்னை: தமிழ்நாடு காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை பெருநகர காவலைச் சேர்ந்த காவலர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர். திரு.அ.கா. விசுவநாதன் IPS. அவர்கள் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். இப்போட்டியில் சென்னை பெருநகர காவல் துறை சார்பாக 141 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மொத்தம் 12 போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர். ஆண்கள் பிரிவில்: 1.கால்பந்து (FOOT BALL) -FIRST PLACE. 2.ஆக்கி (HOCKEY) -SECOND PLACE. […]
Author: policeenews
விழாக்காலங்களில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு காவல்துறையின் ஆலோசனைகள்
சென்னை: பகல் நேரங்களில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் சில சமயங்களில் எதிர்பாராத வகையில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அடையாளம் தெரியாதவர்கள் வீடுகளில் புகுந்து தனியாக இருக்கும் பெண்களிடம் நகைகளை கொள்ளையடிப்பதும், அவற்றை தடுக்கவரும் பெண்களை கொலை செய்வதும் நகை பணத்துடன் தப்பி ஓடும் சம்பவங்களை கேள்விப்பட்டு வருகிறோம். மேலும் நகை பாலிஷ் செய்வதாக சொல்லி தனியாக இருக்கும் பெண்களிடம் மோசடி கும்பல் நகைகளை அபகரித்து செல்லும் நிகழ்வுகளும் நடக்கின்றன. வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் […]
மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் உதவி-ஆய்வாளர் பரிதாபமாக சாவு
ஈரோடு: பவானி அருகே உள்ள பெருமாள்கரடை சேர்ந்தவர் திலகன் (52). இவர் சத்தியமங்கலம் அருகே கெஞ்சனூரில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் உதவி-ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று மாலை புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் இருந்து வேலை விஷயமாக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சென்றபோது அந்த வழியாக கொண்டையம்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் அருகே உள்ள காந்திநகருக்கு […]
தம்பிக்கு வைத்த குறி அண்ணன் உயிரைப் பறித்தது: ஐஸ் ஹவுஸ் இளைஞர் கொலையில் குற்றவாளி கைது
நான்கு நாட்களுக்கு முன்னர் ஐஸ் ஹவுஸில் நடந்த கொலை சம்பந்தமாக குற்றவாளி பிடிபட்டார். தம்பியை கொலை செய்ய நடந்த முயற்சியில் அண்ணன் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. சென்னை திருவெல்லிகேணி கஜபதி தெருவைச் சேர்ந்தவர் முனியன்(24). ஆட்டோ ஓட்டுநர். சில ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்த இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 13-ம் தேதி மாலை 3 மணி அளவில் முனியன் ஐஸ் அவுஸ் பெசன்ட் சாலை வழியாக ராம் நகரில் 8-வது தெரு பகுதியில் தன்னுடைய […]
திண்டுக்கல்லில் புதுமாப்பிள்ளைக்கு அரிவாள் வெட்டு கொலை வழக்கில் 5 பேர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் பாரதிபுரம் சந்தைரோட்டை சேர்ந்த மணிகண்டன் மகன் விக்னேஷ் என்ற விக்கி (21). இவருக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆகிறது. இவர் நாகல்நகர் ரவுண்டானா அருகே உள்ள ஒரு தள்ளுவண்டி கடையில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் விக்னேஷ் கடையில் இருந்தபோது அங்குவந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். மக்கள் அதிகம் கூடும் இடத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. […]
கடலூர் அருகே இருதரப்பினர் மோதல்; சூழலில் காவல்துறையினர் குவிப்பு
கடலூர்: கடலூர் முதுநகர் அடுத்த ஏணிக்காரன்தோட்டம் மாரியம்மன்கோவில் அருகே அப்பகுதியை சேர்ந்த சிலர் கும்பலாக அமர்ந்திருந்தனர். அப்போது, அவ்வழியாக சென்ற மற்றொரு தரப்பை சேர்ந்த சிலருக்கும், கோவில் முன்பு அமர்ந்திருந்தவர்களுக்கும் இடையே திடீரென வாய்த் தகராறு ஏற்பட்டது. இது முற்றி ஒருவருக்கொருவர் நெட்டித்தள்ளிக் கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர், ஏணிக்காரன்தோட்டம் பகுதிக்கு வந்து சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள், ஆட்டோ, மினிலாரி ஆகிய வாகனங்களின் முன்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கினர். மேலும், அந்த பகுதியில் உள்ள […]
மன உளைச்சல் காரணமாக திருப்பூரில் காவலர் தற்கொலை
திருப்பூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சதீஸ்குமார் (34). இவருடைய மனைவி விஷ்ணுதேவி (27). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 2½ வயதில் ஒரு மகனும் உள்ள னர். சதீஸ்குமார் திருப்பூர் சாமுண்டிபுரம் திருநீலகண்டர் வீதியில் குடும்பத்துடன் தங்கி, திருப்பூர் மாநகர மதுவிலக்கு பிரிவில் காவலராக வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் பொங்கல்பண்டிகைக்கு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல சதீஸ்குமார் முடிவு செய்தார். அப்போது, விஷ்ணுதேவி தன்னுடைய தாய் வீட்டுக்கு முதலில் சென்றுவிட்டு, […]
வியாசர்பாடியில் சேதமடைந்த காவல் நிலையம் சிரமப்படும் காவல்துறையினர்
சென்னை: சென்னை வியாசர்பாடி காவல் நிலையம், அந்த பகுதியில் ஏற்கனவே இருந்த காவல் குடியிருப்பில் இயங்கி வருகிறது. இந்த காவல் நிலைய வளாகத்தில் வளர்ந்து நிற்கும் செடி, கொடிகள், பாழடைந்த கட்டிடங்கள் மற்றும் அங்கு குவிந்து கிடக்கும் பழுதடைந்த வாகனங்கள் ஆகியவை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது. மொத்தம் 15 வீடுகள் கொண்ட இந்த காவல் குடியிருப்பு சுமார் 30 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. அதே பகுதியில் சுமார் 25 […]
அதிநவீன படகுகளில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க தீவர சோதனை
கன்னியாகுமரி: கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்காக அடிக்கடி கடல் பகுதியில் கண்காணிப்பு நடத்தபட்டு வருகிறது. அதன்படி நேற்று கன்னியாகுமரி கடல் பகுதிகளில் சவுகாஜ் ஆபரேஷன் என்ற பெயரில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வருகிற 19-ந்தேதி மதியம் 12 மணி வரை நடைபெறும். துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு சென்னை வருகையை முன்னிட்டு இந்த சோதனைகள் செய்யபட்டது. கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினருக்கு சொந்தமான 2 அதிநவீன படகுகள் மூலம் கடல் பகுதியை தீவிரமாக […]
பொங்கல் திருநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சிபி சக்கரவத்தி, IPS அவர்களின் உத்தரவின் படி
காவல்துறை மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப், போலிஸ் இ நியுஸ், பொதுமக்கள், இணைந்து நடத்திய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று வீரர்களுக்கு பொன்னேரி வட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. P.ராஜா அவர்கள் பரிசுகள் வழங்கினார் பொன்னேரி காவல்நிலைய ஆய்வாளர் R.மகேந்திரன் அவர்களும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப் தலைவர் டாக்டர் சின்னதுரை அவர்களும் மற்றும் பொன்னேரி காவல்நிலைய துணை ஆய்வாளர் ரதி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.