கடந்த 13.10.2019 முதல் 16.10.2019 வரை 4 நாட்கள் மதுரை MGR மைதானத்தில் நடைபெற்ற 59-வது தமிழ்நாடு மாநில காவல் துறை மண்டலங்களுக்கிடையான தடகள போட்டியில் அனைத்து மண்டலத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் முதல் காவல் ஆளிநர்கள் வரை கலந்துக்கொண்டனர். இதில் சென்னை பெருநகர காவல் துறை முதல் இடத்தை பிடித்தது. மேற்படி போட்டியில் சென்னை பெருநகர காவல் துறையினர் 37 தங்கம், 14 சில்வர் மற்றும் 13 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.மேற்படி காவல் துறை மண்டலங்களுக்கிடையான தடகள போட்டியில் வெற்றி பெற்ற காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் (30.10.2019) நேற்று நேரில் அழைத்து பாராட்டினார்.
ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்