இன்று மதுரை மாநகரில் தொடர் மழையின் காரணமாக பழங்காநத்தம் பாலத்தின் கீழ் பகுதியில் அதிக தண்ணீர் தேங்கி சாலை மிகவும் பழுதடைந்து பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் சிரமப்பட்டதால் தெற்கு போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக JCP இயந்திரம் மூலம் சாலையை சீரமைத்து தண்ணீரை வெளியேற்றி போக்குவரத்து நெரிசலை சரிசெய்து பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். போக்குவரத்து காவல்துறையினரின் பணியினை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெறுகின்ற விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு இடதுசாரிகள் சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தனர்.
வழிப்பறி கொள்ளையர்கள் சென்னையில் கைது. வியாசர்பாடி பகுதியில் செல்போன் வழிப்பறி செய்த மணிமாறன்( வியாசர்பாடி),சூர்யா(வியாசர்பாடி) ஆகிய 2 நபர்கள்P-3 வியாசர்பாடி காவல் குழுவினரால் கைது. ரூ.17,000 மதிப்புள்ள 1 செல்போன் கைப்பற்றப்பட்டது (28.02.2021). P-3 Vyasarpadi Police nab two accused for snatching cell phone in Vyasarpadi area – 1 cell phone worth Rs.17,000/- seized (28.02.2021). சென்னை, வியாசர்பாடி,பகுதியைச் சேர்ந்த சங்கர், வ/45,என்பவரிடம் 27.02.2021 அன்று காலை இருசக்கர வாகனத்தில் […]
தருமபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே சொரக்காப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கோவிந்தசாமி. இவர் பெங்களுருவில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், அதே மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த ஐஸ்வர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனையடுத்து இவர்கள் […]