புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதியில் பெரியாரின் முழு உருவச் சிலை நேற்று உடைத்து சேதப்படுத்தப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். புதுக்கோட்டை விடுதியில் அரசு தொடக்கப் பள்ளி அருகே திராவிடர் கழகம் சார்பில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் படிப்பகம் ஏற்படுத்தப்பட்டது. இதன் அருகே 2013-ல் சுமார் ஏழரை அடி உயரத்தில் பெரியாரின் முழு உருவ சிமென்ட் சிலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர் நேற்று இரவு […]
Author: policeenews
1,500 தம்பதிகளை சேர்த்து வைத்து சாதனை: சேவை மனப்பான்மையுடன் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர்
சென்னையில் பெண் போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் ஒருவர் சேவை மனப்பான்மையுடன் தன்னிடம் பிரச்சினையுடன் வந்த 1500 தம்பதிகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து சேர்த்து வைத்துள்ளார். பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான அவரை காவல் ஆணையர் பாராட்டியுள்ளார். சென்னை ஐகோர்ட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் ஜெயமணி (56). இவர் மற்ற போலீஸார் போல் தினசரி வேலையில் மூழ்கி விடுவதோடல்லாமல் கூடுதலாக தனிப்பட்ட முறையில் சில வேலைகளை செய்துள்ளார். இதன் மூலம் பலராலும் பாராட்டப்படும் இவரது சேவை அறிந்து காவல் […]
பெரியார் சிலையின் தலையை துண்டித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே தந்தை பெரியார் சிலையின் தலையை துண்டித்த மர்ம நபர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி என்ற கிராமத்தில், அரசு தொடக்கப்பள்ளியின் எதிரில் பெரியார் படிப்பகம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகிலேயே தந்தை பெரியாரின் திருவுருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு இந்த சிலையின் தலையை மர்ம நபர்கள் துண்டித்துள்ளனர். காலையில் பெரியார் சிலையின் தலை தனியாக கீழே கிடப்பதை பார்த்த […]
ஆர்டர்லி முறை பின்பற்றப்படுகிறதா? காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி கேள்வி
ஆர்டர்லி முறையை கடைபிடிக்கிறீர்களா? என்பது குறித்து உடனடியாக விளக்கம் அளிக்குமாறு, அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். காவல் உயர் அதிகாரிகளின் இல்லங்களிலும், அலுவலகங்களிலும், அவர்களுக்கு உதவிகள் புரிவதற்காக, காவல்துறையில் பணியில் இருக்கும் காவலர்கள் ஆர்டர்லியாக பணியமர்த்தப்படுவர். இதற்கு எதிர்ப்பு எழுந்ததால், பல ஆண்டுகளுக்கு முன் ஆர்டர்லி முறை கைவிடப்பட்டது. இருப்பினும், சில காவல் உயர் அதிகாரிகள், காவல்துறையில் பணியில் இருப்பவர்களையே, ஆர்டர்லியாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், 1979ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில், […]
பெண்ணின் கைகளை துண்டித்தவர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே தவறான நட்பு சந்தேகத்தால் பெண்ணின் கைகள் துண்டிக்கப்பட்டது தொடர்பாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர்(40); லாரி ஓட்டுநர். இவருக்கு மனைவி சத்யா மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். மனைவியிடம் தகராறு இந்நிலையில், சத்யாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த டெய்லர் ஷேக்முகமது என்பவருக்கும் இடையே தவறான நட்பு இருப்பதாக சந்தேகம் அடைந்த சங்கர் தனது மனைவி சத்யாவிடம் தகராறு செய்துவந்தார். […]
முயல் வேட்டை ஐவர் கைது:- அருப்புக்கோட்டை அருகே குல்லூர்சந்தையில் பெரிய அளவில் நீர் தேக்கம்
முயல் வேட்டை ஐவர் கைது:- அருப்புக்கோட்டை அருகே குல்லூர்சந்தையில் பெரிய அளவில் நீர் தேக்கம் (அணைகட்டு) உள்ளது அதனை சுற்றி புல்வெளிகள் முட்புதற்கள் அதிகம் என்பதால் காட்டுமுயல் அதிகமாகவே இருக்கும் இதனை பாதுகாப்பதற்கு வனத்துறையினர் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்தனர் குறிப்பிடும்படியாக சந்தேகத்தின் பெயரில் இரவில் முயல் வேட்டையில் இருந்தவர்களை வனத்துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர் அவர்களிடமிருந்து முயல் மற்றும் முயல் வேட்டைக்கு பயன்படும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதுபோல காட்டுக்குள் இருக்கும் காடை,கெளதாரி, சிறுநரி,ஆகியவை வேட்டையாடுவதற்கு தடைசெய்யப்பட்டதாகும் மீறும் […]
பொது மக்களின் நலனில் அருப்புக்கோட்டை காவல் துறை:-
எங்கு பார்த்தாலும் வாகனம், பொது ஜன நெருக்கடி,இதனால் அல்லல் பட்டது அருப்புக்கோட்டை அடிக்கடி வாகன விபத்துக்கள் அருப்புக்கோட்டை To மதுரை ரோடு பாலம் ஏற்றம் இறக்கம் வரும்போது ஜெட் வேகத்தில் செல்கிறது இதனால் விபத்து நடக்கும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் நகர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்களின் நடவடிக்கையால் மதுரை ரோட்டில் வாகனத் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது இதனால் அந்த வழியாக வாகனங்கள் மெதுவாகச்சென்று வருவது மனநிம்மதி அளிக்கிறது என்று பாதசாரிகளின் தெரிவிக்கின்றனர் காவல் துறையின் இந்த […]
மதுரவாயலில் துணிகரம்; விபச்சார தடுப்பு பிரிவு போலீஸ் என மிரட்டி பெண்ணிடம் நகை, பணம் பறிப்பு: பெண் உட்பட 3 பேர் கைது 2 பேர் ஓட்டம்
கைது செய்யப்பட்ட ராஜா, அஷோக் விக்டர், கைப்பற்றப்பட்ட வாகனம் சென்னையை அடுத்த போரூர் அய்யப்பன்தாங்கல், ஆயில் மில் ரோடு, பாரதியார் தெருவில் வசிப்பவர் சுந்தரசெல்வி(52), இவரது மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சுந்தரசெல்வி மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்நிலயில் இவருக்கு தீனதயாளன்(46) என்பவர் பழக்கமாகியுள்ளார். தன்னை வழக்கறிஞர் என்று கூறி பழகியுள்ளார். இதில் அடிக்கடி சுந்தரசெல்வி வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சுந்தரசெல்வியின் வீட்டிற்கு வழக்கம்போல் […]
சாலையோரம் கிடக்கும் முதியவருக்கு லுங்கியை வாங்கி போர்த்துகிறார், 2.அவரை தூக்கி ஓரம் அமரவைக்கிறார், 3.உணவு எதாவது வேண்டுமா என்று கேட்கிறார், 4.செய்த உதவிக்கு பெரியவர் கையெடுத்து கும்பிடுகிறார்
சென்னையில் சாலையோரம் துணி இல்லாமல் கிடந்த முதியவருக்கு புது லுங்கி வாங்கி அணிவித்து அவரை தூக்கி ஓரம் உட்கார வைத்து குறைகளை கேட்கும் போக்குவரத்து தலைமை காவலர் ஒருவரை காரில் சென்றவர் வீடியோ எடுத்து பாராட்டி போட்டுள்ளது வைரலாகி வருகிறது. காவல்துறையில் அதிகம் விமர்சனத்துக்குள்ளாகும் துறை போக்குவரத்து காவல்துறை மட்டுமே. காரணம் மோட்டார் வாகனம் செலுத்தும் சாதாரண மக்களிடம் நல்லதோ கெட்டதோ தினமும் மல்லுக்கட்டுவது இவர்களே. சென்னை முதல் தமிழகம் முழுதும் போக்குவரத்து காவலர்களின் அத்துமீறல்களால் பாதிக்கப்படுபவர்கள் […]
சென்னை ட்ரக்கிங் கிளப்பில் தேனி போலீசார் விசாரணை
தேனி குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் பலியான நிலையில், சென்னையில் உள்ள டிரக்கிங் கிளப்பில் தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் இருந்து குரங்கணிக்கு ட்ரக்கிங் குழுவை வழி நடத்திச் சென்ற சென்னிமலையைச் சேர்ந்த பிரபு என்பவரிடம், தனிப்படை போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், சென்னையில் இருந்து டிரக்கிங் செல்வோரை அழைத்து சென்றதாக பாலவாக்கத்தில் உள்ள சென்னை டிரக்கிங் கிளப்பிலும் தேனி போலீசார் ஆய்வு நடத்தினர். நீலாங்கரை காவல் நிலையத்தில் டிரக்கிங் […]










