தேனி குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் பலியான நிலையில், சென்னையில் உள்ள டிரக்கிங் கிளப்பில் தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் இருந்து குரங்கணிக்கு ட்ரக்கிங் குழுவை வழி நடத்திச் சென்ற சென்னிமலையைச் சேர்ந்த பிரபு என்பவரிடம், தனிப்படை போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், சென்னையில் இருந்து டிரக்கிங் செல்வோரை அழைத்து சென்றதாக பாலவாக்கத்தில் உள்ள சென்னை டிரக்கிங் கிளப்பிலும் தேனி போலீசார் ஆய்வு நடத்தினர்.
நீலாங்கரை காவல் நிலையத்தில் டிரக்கிங் கிளப் குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். வணிக நோக்குடன் டிரக்கிங் கிளப் செயல்படுகிறதா, முறையான நடைமுறைகளை பின்பற்றப்படுகிறதா உள்ளிட்டவை தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.