முயல் வேட்டை ஐவர் கைது:-
அருப்புக்கோட்டை அருகே குல்லூர்சந்தையில் பெரிய அளவில் நீர் தேக்கம் (அணைகட்டு) உள்ளது அதனை சுற்றி புல்வெளிகள் முட்புதற்கள் அதிகம் என்பதால் காட்டுமுயல் அதிகமாகவே இருக்கும் இதனை பாதுகாப்பதற்கு வனத்துறையினர் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்தனர் குறிப்பிடும்படியாக சந்தேகத்தின் பெயரில் இரவில் முயல் வேட்டையில் இருந்தவர்களை வனத்துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர் அவர்களிடமிருந்து முயல் மற்றும் முயல் வேட்டைக்கு பயன்படும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதுபோல காட்டுக்குள் இருக்கும் காடை,கெளதாரி, சிறுநரி,ஆகியவை வேட்டையாடுவதற்கு தடைசெய்யப்பட்டதாகும் மீறும் பட்சத்தில் தண்டணை நிச்சயம் இப்படி வேட்டையாடுவதால் இம்மாதிரியான சின்னஞ்சிறு ஜீவராசிகள் கூட எதிர்கால சந்ததிகளுக்கு தெரியாமலேயே போய்விடும் வனத்துறையின் சேவை வருங்கால சந்ததிக்குத்தேவை என்பதை போலீஸ் இ நியூஸ் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
VRK.ஜெயராமன் MA Mphil மாநில செய்தியாளர்
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்
