சென்னை கோபாலபுரத்தில் அரசு ஊழியரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோபாலபுரத்தில் சாலையில் நடந்து சென்ற அடைக்கண் என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கைவரிசை காட்டியுள்ளனர். முகமது ரவூப், இம்ரான் பாஷா ஆகியோரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்
Police Recruitment
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.35 கோடி தங்கம், குங்குமப்பூ பறிமுதல்
சென்னை துபாயில் இருந்து விமானம் நேற்று சென்னை வந்தது. சுங்கத் துறை அதிகாரிகள் பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த அமீர் (41), ஆரூன் (29) ஆகியோர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தனி அறையில் அழைத்துச் சென்று சோதனை செய்ததில், அவர்கள் ரூ.71.5 லட்சம் மதிப்புள்ள 1.82 கிலோ தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்களைக் […]
கார் மோதி காவலர் மரணம்: கல்லூரி மாணவர் கைது
தாம்பரம் குரோம்பேட்டை நியூகாலனி 3-வது தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (46). இவர் சேலையூர் காவல் நிலையத்தில், தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பணி முடித்து, தனது இருசக்கர வாகனத்தில், வீட்டுக்குப் புறப்பட்டுள்ளார். தாம்பரம் கடப்பேரி அருகே அதிவேகமாக வந்த கார் ஒன்று நின்று கொண்டிருந்த தலைமைக் காவலர் வாகனத்தின் மீது பின்னால் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த […]
தூத்துக்குடி வீட்டில் திருப்பூர் இளம்பெண் உடல் கருகி சாவு ;கள்ளக்காதலன் கைது
தூத்துக்குடி,2019 நவம்பர் 11 ; தூத்துக்குடி வீட்டில் திருப்பூர் இளம்பெண் உடல் கருகி பிணமாக கிடந்தார். அவரை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்தது தெரியவந்தது. தூத்துக்குடி விவேகானந்தா நகர் ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் ஒரு தம்பதி வாடகைக்கு குடியேறினர். ஆனால் நேற்று மதியம் வரை அந்த வீடு திறக்கப்படவில்லை. வீட்டின் உள்ளே இருந்து உடல் எரிந்த துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் தாளமுத்துநகர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். […]
திருச்சி அரசு மருத்துவமனையில் வெளிநாட்டு கைதிகள் போராட்டம்
திருச்சி தற்கொலைக்கு முயன்றதாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமைச் சேர்ந்த வெளிநாட்டுக் கைதிகள் நேற்று மருத்துவமனை வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மத்திய சிறையில் இலங்கை, வங்கதேசம், பல் கேரியா, சீனா உள்ளிட்ட நாடு களைச் சேர்ந்த 72 பேர் அடைக் கப்பட்டுள்ளனர். இவர்களில், 70 பேர் கடந்த 7-ம் தேதி உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை செய்ய வலியுறுத்தல் தண்டனை காலத்தைத் தாண்டி ஆண்டுக்கணக்கில் சட்ட […]
மாவோயிஸ்ட்களின் ஆயுத பயிற்சியாளர் கைது
கோவை மாவோயிஸ்ட்களின் முக்கிய ஆயுதப் பயிற்சியாளரான சத்தீஸ் கர் மாநிலத்தைச் சேர்ந்த தீபக், தமிழக சிறப்பு அதிரடிப்படை போலீஸாரால் ஆனைகட்டி அருகே நேற்று கைது செய்யப்பட்டார். தமிழக – கேரள எல்லையை ஒட்டியுள்ள அகழி, அட்டப்பாடி உள்ளிட்ட வனப் பகுதிகளில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் இருந்து வருகிறது. பாலக்காடு மாவட்டம் அட்டப் பாடி அருகே உள்ள மஞ்சக்கண்டி பகுதியில் கடந்த அக்டோபர் 28-ம் தேதி கேரள அதிரடிப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது, மாவோயிஸ்ட்களுக்கும், அதிரடிப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் […]
பொள்ளாச்சி சாலையில் ஆபத்தை ஏற்படும் கம்பிகளை அகற்றிய போலீஸாரின் பொறுப்புணர்வு: பொதுமக்கள் பாராட்டு
பொள்ளாச்சி பொள்ளாச்சியில் சேதமடைந்த சாலையில் விபத்தை ஏற்படுத்தும் கம்பிகளை வெட்டி எடுத்த போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். பொள்ளாச்சி மீன்கரை சாலை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கேரளாவுக்கும், கேரளப் பகுதியிலிருந்து தமிழகத்துக்கு வந்து செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இந்த வழியாக இரவு பகலாக வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். இந்த சாலையில் சீனிவாசபுரத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலம் ரயில்வே கீழ்மட்ட பாலம் கட்டப்பட்டது. பாலத்தின் கீழ் சாலை தரமாக அமைக்கப்படாததால் சாலையின் கான்கிரீட் பெயர்ந்து […]
இன்று 10-11-2019 ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்ததை ஒட்டி தண்டையார்பேட்டை ரயில்வே சோதனை
இன்று 10-11-2019 ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்ததை ஒட்டி தண்டையார்பேட்டை ரயில்வே யார்டு மற்றும் தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் அவர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய காவல் ஆளிநர்களுடன் ரயில்வே தண்டவாளம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்காக தீவிர கண்காணிப்பு சோதனை செய்யப்பட்டது.என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் M. குமரன்
தூத்துக்குடி தருவை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர், ஜெயில் வார்டன்களுக்கான உடல்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் 06.11.2019 ரயில்வே ஐ.ஜி திருமதி. V. வனிதா, இ.கா.ப. அவர்கள் சூப்பர் செக் அதிகாரியாகவும், தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி திருமதி. N. Z. ஆசியம்மாள் இ.கா.ப. அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப. அவர்கள் தலைமையில் இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் ஜெயில் வார்டர்களுக்கான உடல்தகுதி தேர்வு இன்று(06.11.2019) தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இத்தேர்வில் தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வு குழுமம் நடத்திய இரண்டாம் […]
காணாமல் போன மொபைல் போன்களை கண்டுபிடித்த காவல்துறையினர். புகார் அளித்தவர்களிடம் ஒப்படைப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டில் கைபேசிகள் காணாமல் போனது மற்றும் திருட்டு போனது சம்பந்தமாக காவல் நிலையங்களில் 778 புகார் மனுக்கள் பதியப்பட்டும், கைபேசிகள் பறிப்பு சம்பந்தமாக 17 வழக்குகள் பதியப்பட்டு நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. Pஅரவிந்தன் IPS அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்ட சைபர் பிரிவின் உதவியோடு காணாமல் போன, திருடு போன கைபேசிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட […]