தேனி மாவட்டம் 31.10.2019 தேனி மாவட்ட காவல் துறை சார்பாக மக்களின் பாதுகாப்பு நலன் கருதி “தேனி காவலன்” எனும் பெயரில் புதிய செயலி (Android Application -play store – Theni kavalan) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் தற்போது தேனி மாவட்ட காவல் நிலையங்கள் மற்றும் நிலைய பொறுப்பு அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்களை எடுத்து பயன் பெறலாம். மேலும் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் போது அதன் விபரத்தை தேனி காவலன் […]
Police Recruitment
பணியின் போது சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு!
பணியின் போது சிறப்பாக செயல்பட்ட காவல் ஆளிநர்கள், சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபர் மற்றும் ஆட்டோவில் பயணி தவறவிட்ட 25 சவரன் தங்க நகைகளை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்,திரு.அ.கா.விசுவநாதன்,நேரில் அழைத்து பாராட்டினார். 1.பட்டாபிராம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிய நபர் கைது. 12 சவரன் தங்க நகைகள் பறிமுதல்!!! சென்னை, பட்டாபிராம், அண்ணம்பேடு, பெத்தேல் நகரில் கடந்த 14-ந்தேதி […]
MBBS to IPS ஆன கதை!* புதுக்கோட்டை மாவட்ட புதிய காவல்துறைக் கண்காணிப்பாளராக அருண் சக்திகுமார் பொறுப்பேற்க உள்ளார்.
MBBS to IPS ஆன கதை!* புதுக்கோட்டை மாவட்ட புதிய காவல்துறைக் கண்காணிப்பாளராக அருண் சக்திகுமார் பொறுப்பேற்க உள்ளார். சொந்த ஊர்:- கிருஷ்ணகிரி. படிப்பு:- சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தவர். ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்பது இவர் கனவாக இருந்தது. 2012-ம் ஆண்டில் ஐ.பி.எஸ் ஆகத் தேர்வானார். இவர் முதன்முதலில் நெல்லை மாவட்டம் தாழையூத்து ஸ்டேஷனில்தான் ஐ.பி.எஸ்-ஸாகப் பொறுப்பேற்றார். ஆறு மாதங்கள் இங்கு பயிற்சி எடுத்தார். பின்னர் மதுரை மாநகரில் சட்டம் ஒழுங்கு துணை […]
முதியவரை மீட்ட விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளர் திரு.கணகேசன்
30.10.19-ந் தேதி விழுப்புரம் சிக்னலில் சென்னை செல்லும் பேருந்து நிழற்குடையில் உடல் நலம் குன்றி ஆதரவற்று பசியோடு ஒரு முதியவர் படுத்துக் கிடந்தார். இவற்றை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலையம் காவல் ஆய்வாளர் திரு.கணகேசன் அவர்கள் இதனை கண்டு காவலர்களின் உதவியுடன் உடனடியாக ஒரு ஆட்டோவை ஏற்பாடு செய்து தனது சொந்தப் பணத்தில் தானே முன்னின்று அந்த முதியவரை தூக்கி ஆட்டோவில் ஏற்றி முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மனித நேயத்தோடு […]
தமிழகத்தின் பல காவல் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து அழைப்பு
தமிழகத்தின் பல காவல் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து இன்று வெடிகுண்டு மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன. நெல்லை சேரண்மகாதேவி காவல் நிலையம், தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனை அடுத்து, அனைத்து காவல் நிலையங்களும் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்புகள் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.
வடமதுரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விபத்துக்கள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு செல்லும் வாகனங்களை கண்காணிப்பதற்காக 3 சிசிடிவி கேமராக்களை பொருத்திய வடமதுரை போலீசார்
03.11.19 திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட வேல்வர்கோட்டை பிரிவு அருகே உள்ள சாலையில் மாவட்ட கண்காணிப்பாளர் உயர் திரு இரா.சக்திவேல் அவர்களின் அறிவுறுத்தலின்படி நிலைய ஆய்வாளர் திரு.கருப்புசாமி அவர்களின் தலைமையில் 3 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டன.இதன் மூலம் விபத்துக்களை ஏற்படுத்தி விட்டு செல்லும் வாகனங்களை கண்டுபிடிக்கவும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு செல்வர்களை கண்டுபிடிக்கவும் இந்த கேமராக்கள் பயன்படுகிறது.இதனை யறிந்த பொதுமக்கள் காவல்துறையினரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை […]
இரவு நேரங்களில் விபத்துக்களை தடுக்க நெடுஞ்சாலைகளில் ஒளிரும் பட்டைகள் ஒட்டிய தடுப்புக் கம்பிகள்
தேனி மாவட்டம் 01.11.2019 கம்பம் போக்குவரத்து காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.தட்சணாமூர்த்தி அவர்கள் தலைமையிலான போலீசார்கள் அதிவேகமாக செல்லும் வாகனங்களின் வேகத்தை குறைத்து விபத்துக்களை தவிர்க்கும் வகையில் உத்தமபாளையம் முதல் குமுளி வரை உள்ள நெடுஞ்சாலை பகுதியில் விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அங்கு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் இரவுநேர வாகன ஓட்டிகளுக்கும் தெளிவாக தெரியும் வகையில் ஒளிரும் பட்டைகள் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட […]
பொதுமக்களின் பாராட்டை பெற்ற போக்குவரத்து காவலர்
21.10.2019-ம் தேதியன்று விருதுநகர் அரசு மருத்துவமனை அருகே சாலை முழுவதும் தேங்கி இருந்த மழைநீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கண்ட விருதுநகர் போக்குவரத்து காவலர் திரு.ரெங்கராஜன் அவர்கள் தேங்கிய மழைநீரை வாய்க்கால் வெட்டி நீரை வெளியேற்றி வாகன ஓட்டிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் போக்குவரத்தினை சரி செய்த காவலரை பொதுமக்கள் பாராட்டி சமூக வலைத்ததளங்களில் பகிர்ந்தனர். ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் […]
தாம்பரம் பகுதியில் சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.3,02,000/- பணத்தை எடுத்து நேர்மையாக தாம்பரம் சரக உதவி ஆணையாளரிடம் ஒப்படைத்த நபரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னை, மேற்கு தாம்பரம், காமராஜர் தெருவில் வசித்து வரும் திரு.சி.மதன்ராஜ்ஜெயின், வ/58, த/பெ.சம்பாலால் என்பவர் கடந்த 31.10.2019 மதியம் 03.15 மணியளவில் தனது வீட்டிற்கு சென்று விட்டு திரும்ப கடைக்கு நடந்து வந்து கொண்டிருந்த போது சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூபாய். 3,02,000/- (2000 ரூபாய் தாள்கள்) எடுத்துள்ளார். பின்னர் பணத்தை தவறவிட்ட நபர் வருவார் என்று தனது கடையில் பணத்துடன் காத்திருந்ததாகவும், யாரும் உரிமைகோரி வராத காரணத்தால் மறு நாள் (01.11.2019) மதியம் ரூ.3,02,000/- பணத்தை […]
சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்ய முயன்ற நபர்களை கைது செய்ய உதவிய உதவி ஆய்வாளரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
கடந்த 06.10.2019 அன்று மாலை 4.30 மணியளவில் பள்ளிக்கரணை வேளச்சேரி பிரதான சாலை, ஆதி நகர் சந்திப்பு அருகே S-15 சேலையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கண்காணிப்பு பணியிலிருந்த போது அங்கு சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த நோக்கத்தில் கூடியிருந்த திபெத்தை சார்ந்த நபர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி S–10 பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார். அதனடிப்படையில் போலீசார் விசாரணை செய்து 36 திபெத்தியர்களை கைது செய்தனர். மேற்படி பாதுகாப்பு பணியின் […]