Police Recruitment

முதியவரை மீட்ட விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளர் திரு.கணகேசன்

30.10.19-ந் தேதி விழுப்புரம் சிக்னலில் சென்னை செல்லும் பேருந்து நிழற்குடையில் உடல் நலம் குன்றி ஆதரவற்று பசியோடு ஒரு முதியவர் படுத்துக் கிடந்தார். இவற்றை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலையம்  காவல் ஆய்வாளர் திரு.கணகேசன் அவர்கள் இதனை  கண்டு காவலர்களின் உதவியுடன் உடனடியாக ஒரு ஆட்டோவை ஏற்பாடு செய்து தனது சொந்தப் பணத்தில் தானே முன்னின்று அந்த முதியவரை தூக்கி ஆட்டோவில் ஏற்றி முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மனித நேயத்தோடு உதவிய  காவல் ஆய்வாளரை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published.