Police Recruitment

பணியின் போது சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு!

பணியின் போது சிறப்பாக செயல்பட்ட   காவல் ஆளிநர்கள்,  சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபர்  மற்றும்  ஆட்டோவில் பயணி தவறவிட்ட  25 சவரன் தங்க நகைகளை  ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரை சென்னை பெருநகர  காவல் ஆணையாளர் முனைவர்,திரு.அ.கா.விசுவநாதன்,நேரில் அழைத்து பாராட்டினார்.

1.பட்டாபிராம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிய நபர் கைது. 12 சவரன் தங்க நகைகள் பறிமுதல்!!! 

சென்னை, பட்டாபிராம், அண்ணம்பேடு, பெத்தேல் நகரில் கடந்த 14-ந்தேதி   ரவீந்திரநாத்,  என்பவரது  வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகள், 1/4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் ரூபாய் 30,000/- ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர். இது குறித்து ரவீந்திரநாத்,  பட்டாபிராம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்து போலிசார் விசாரணை மேற்கொண்டு கைரேகை பதிவுகளை ஆராய்ந்ததில் மாங்காட்டை சேர்ந்த   விக்கி (எ) பல்லு விக்கி, (வ/24)  என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தை அடுத்து நகைகளை பறிமுதல் செய்து மேற்படி நபரை கைது செய்து போலிசார்  சிறையில் அடைத்தனர்.

இந்த திருட்டு சம்பவத்தில் திறமையாக செயல்பட்ட

திருநின்றவூர் காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.குணேசேகரன், காவலர்கள் அசன்  தனசேகரன் மற்றும் காவல் குழுவைச் சேர்ந்த யுவராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்தனர். 

  1. தாம்பரம் பகுதியில் சாலையில் கேட்பாரற்று கிடந்த  ரூ.3,02,000/- பணத்தை ஒருவர்  எடுத்து உதவி ஆணையாளர்  வசம்  நேர்மையாக ஒப்படைத்தார்!!! 

சென்னை, மேற்குதாம்பரம், காமராஜர்  நகரில் வசிக்கும் சி.மதன்ராஜ்ஜெயின்,  என்பவர் அதே பகுதியில் ஆதிநாத் என்ற பெயரில் மோட்டார்ஸ் கடை

Leave a Reply

Your email address will not be published.