Police Recruitment

சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்ய முயன்ற நபர்களை கைது செய்ய உதவிய உதவி ஆய்வாளரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

கடந்த 06.10.2019 அன்று மாலை 4.30 மணியளவில் பள்ளிக்கரணை வேளச்சேரி பிரதான சாலை, ஆதி நகர் சந்திப்பு அருகே S-15 சேலையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கண்காணிப்பு பணியிலிருந்த போது அங்கு சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த நோக்கத்தில் கூடியிருந்த திபெத்தை சார்ந்த நபர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி S–10 பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார். அதனடிப்படையில் போலீசார் விசாரணை செய்து 36 திபெத்தியர்களை கைது செய்தனர்.

மேற்படி பாதுகாப்பு பணியின் போது சிறப்பாக செயல்பட்டு சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கத்தில் கூடியிருந்த திபெத்தியர்களை கைது செய்ய உதவியாக இருந்த S-15 சேலையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.அப்துல்முஜீப் என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்,திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் (02.11.2019) இன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published.