
MBBS to IPS ஆன கதை!*
புதுக்கோட்டை மாவட்ட புதிய காவல்துறைக் கண்காணிப்பாளராக அருண் சக்திகுமார் பொறுப்பேற்க உள்ளார்.
சொந்த ஊர்:- கிருஷ்ணகிரி.
படிப்பு:- சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தவர்.
ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்பது இவர் கனவாக இருந்தது. 2012-ம் ஆண்டில் ஐ.பி.எஸ் ஆகத் தேர்வானார். இவர் முதன்முதலில் நெல்லை மாவட்டம் தாழையூத்து ஸ்டேஷனில்தான் ஐ.பி.எஸ்-ஸாகப் பொறுப்பேற்றார். ஆறு மாதங்கள் இங்கு பயிற்சி எடுத்தார். பின்னர் மதுரை மாநகரில் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகப் பணியாற்றினார். பின்னர், நெல்லைக்கு மாறுதலாகி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். தற்போது புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.