Police Department News

தேனியில் முன் விரோத தகராறில் கொடூரம்: தந்தை, மகள் மீது காரை ஏற்றிக் கொன்ற இளைஞர் கைது

தேனியில் முன் விரோதம் காரணமாக தந்தை மகளை கார் ஏற்றி கொலை செய்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.. தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியை அடுத்த ராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். சொந்தமாக டீக்கடை நடத்தி வந்தார். இவரது உறவினர் ரமேஷ்குமார். செல்வராஜ் மற்றும் ரமேஷ்குமார் இடையே டீக்கடை நடத்துவதில் தகராறு இருந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம், மோதல் இருந்துள்ளது. இதுபற்றி ஊர் பஞ்சாயத்து, அக்கம் பக்கத்தவர் பேசியும் பிரச்சினை தீரவில்லை. இருவருக்குமான மோதல் அடிதடி அளவில் சென்றுள்ளது. […]

Police Department News

புத்தாண்டு இரவில் மது போதையில் வாகனம் ஓட்டி சிக்கிய 125 பேர்; பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்று இல்லை: போக்குவரத்து போலீஸார்

புத்தாண்டு இரவு மது போதையில் வாகனம் ஓட்டி சிக்கிய 125 பேருக்கு பாஸ்போர்ட் வாங்க தடையில்லாச் சான்று வழங்க முடியாது என போலீஸார் தெரிவித்துள்ளனர். சமீபகாலமாக சென்னையில் இருசக்கர வாகனங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் அதிக சிசி திறன் கொண்ட மோட்டார் பைக்குகள் சந்தையில் நுழைந்துள்ளன. இதன் காரணமாக சென்னையில் சாலைகளில் செல்லும் இளைஞர்கள் சாகசத்தில் ஈடுபடுவதும், பைக் ரேஸில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. புத்தாண்டு இரவு போதையில் வாகனம் ஓட்டுவது, பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் […]

Police Department News

2018-ம் வருடம் மதுரை மாநகரை குற்றமில்லா மாநகராக மாற்ற கோரிக்கை

மதுரை: 2018-ம் வருடம் மதுரை மாநகரை குற்றமில்லா மாநகராக மாற்ற பொதுமக்கள் அனைவரும் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. 1. 2018-ம் ஆண்டினை விபத்தில்லா ஆண்டாக மாற்ற அனைவரும் முயற்ச்சி மேற்கொள்ள வேண்டும். 2. மதுரை மாநகரை தூய்மையான மாநகராக வைத்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது 3. பொதுமக்கள் அனைவரும் குற்றவாளிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது 4. 2018-ம் வருடம் புத்தாண்டை கொண்டாடும் அனைவரும் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது. […]

Police Department News

குற்றசம்பவங்களை தடுக்க திருநெல்வேலியில் கண்காணிப்பு கேமிராக்கள்

திருநெல்வேலி: வள்ளியூரில் திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், வள்ளியூர் வியாபாரிகள் சங்கம் சார்பில், ரூ.8 லட்சம் செலவில் 27 கண்காணிப்பு கேமராக்கள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளன. வள்ளியூர் பழைய பஸ்நிலையம் முதல் ராதாபுரம் மெயின்ரோடு வழியாக முருகன் கோவில் வரை ஆங்காங்கே இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா வள்ளியூர் காவல் நிலையத்தில் நடந்தது. வியாபாரிகள் சங்க தலைவர் சின்னத்துரை தலைமை தாங்கினார். செயலாளர் ராஜகுமார், பொருளாளர் முருகன் ஆகியோர் […]

Police Department News

திருவள்ளூரில் 1½ கோடி நகைகள் கடந்த ஆண்டில் மீட்பு காவல் கண்காணிப்பாளர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி நிருபர்களிடம் பேட்டி அளித்த போது கூறியதாவது:– திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குற்றத்தடுப்பு, மது விலக்கு, போக்குவரத்து காவல், மதுவிலக்கு அமலாக்கம் போன்றவை முறையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. பிற மாநில குற்றவாளிகளின் நடமாட்டத்தையும், ஆந்திர மாநிலத்தில் இருந்து கள்ளளச்சாராயம் கடத்துவதை தடுப்பதற்கு, தமிழக, ஆந்திர எல்லையோர சாலைகளில், 11 சோதனைச்சாவடிகள் அமைத்து, 24 மணி நேரமும் கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு வீடு புகுந்து […]

Police Department News

ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்திய லாரி உரிமையாளர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்திச் செல்லப் பயன்படுத்தப்பட்ட லாரியின் உரிமையாளர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 27 ஆம் தேதி பூந்தமல்லி நசரத்பேட்டை அருகே போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து கேரளாவை நோக்கி ரப்பர் ஏற்றி வந்த லாரியை மடக்கி சோதனையிட்டனர். இதில் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 270 கிலோ கஞ்சா அந்த லாரியில் கடத்திச் செல்லப்படுவதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து, லாரியைப் பறிமுதல் […]

Police Department News

ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப் தலைவர் டாக்டர் சின்னதுரை அவர்கள் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் டாக்டர். ஏ.கே.விஸ்வநாதன் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்

ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப் தலைவர் டாக்டர் சின்னதுரை அவர்கள் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் டாக்டர். ஏ.கே.விஸ்வநாதன் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்

Police Department News

மும்பை கமலா மில்ஸ் வளாக தீ விபத்து: மதுபான விடுதியின் 2 மேலாளர்கள் கைது

மும்பை கமலா மில்ஸ் வளாக தீ விபத்தைத் தொடர்ந்து, விதிமீறல் புகாருக்கு ஆளான ஐ அபோவ் மதுபான விடுதியின் மேலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். மும்பை கமலா மில்ஸ் வளாகத்தில் செயல்பட்டு வந்த 2 ஓட்டல்கள், மது விடுதிகளில் 2 நாட்களுக்கு முன்பு பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 55 பேர் காயமடைந்தனர். இந்த வளாகத்தில் சட்ட விதிகளை பின்பற்றாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதும், தீயணைப்புத் தடுப்பு விதிமுறைகள் அங்கு கடைபிடிக்கப்படவில்லை என்பதும் […]

Police Department News

சேலத்தில் விபத்தில் சிக்கிய காவல் துறையினர் ஏட்டு இரவு முழுவதும் மயங்கி கிடந்த பரிதாபம்

சேலம் அருகே விபத்தில் சிக்கிய ஏட்டு இரவு முழுவதும் உதவி கிடைக்காமல், சாலையோரம் மயங்கி கிடந்தார். அவரை ரோந்து போலீஸார் மீட்டு தனியார் மருத்துவமனயைில் சிகிச்சைக்கு அனுப்பினர். சேலம் மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றுபவர் ஏட்டு வெங்கடாசலம். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து மல்லூரில் உள்ள வீட்டுக்கு மோட்டார் சைக்கிள் மூலம் திரும்பினார். இரவு வெகு நேரமாகியும் வெங்கடாசலம் வீடு திரும்பாத நிலையில், அவரது குடும்பத்தினர் அலைபேசி […]

Police Department News

பல்கலை மாணவர் 4 பேர் கைது

டெல்லியில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள்புழக்கத்தில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், போதைப்பொருள் தடுப்புப் படையினர் நடத்திய விசாரணையில் டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழக மாணவர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், இமாச்சலபிரதேசத்தில் இருந்து போதைப்பொருள்களை பெற்று இங்கு விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. இந்நிலையில், இந்தப் போதைப்பொருள் விற்பனையில் தொடர்புடையதாக டெல்லி பல்கலைக்கழக மாணவர் அனிருத் மாத்தூர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் டென்சின், ஏமிதி பல்கலைக்கழக மாணவர் சாம் […]