கொரோனா இரண்டாவது அலை அதிகரிப்பையொட்டிசென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு .மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்ப்படுத்தினார்.
சென்னை பெருநகர காவல் .
இன்று 12 .4 .2021 சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப.
அவர்கள் உத்தரவுபடி கொரோனாநோய் தொற்று தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு ஊசி போடும் அவசியம் குறித்து விழிப்புணர்வை பொதுமக்கள் வர்த்தகர்கள் திருமண மண்டப உரிமையாளர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களில் அண்ணா நகர் காவல்மாவட்ட துணை ஆணையர் திரு.ஜவகர்.இ.கா.ப தலைமையில் அண்ணாநகர் மாவட்ட அனைத்து காவல் நிலைய சரகங்களிலும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இதில் முக கவசம் அணிதல் சமூக இடைவெளி கடைபிடித்தல் அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கையை கழுவுதல் மற்றும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுதல் குறித்து அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அன்பான காவல்துறையினருக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
தாய்மண்ணுக்கும் காவல் நீயே!
தமிழ் பற்றுக்கும் காவல் நீயே!
தமிழ் மக்களுக்கும் காவல் நீயே
மலர்களை வட்டமிடும் வண்டுபோல மக்களை காப்பாற்றும் காவல் துறையே !
கழுகு தன் குஞ்சுகளை பாதுகாப்பது போல மக்களை காப்பாற்றும் காவல்துறையே!
தான் உறங்காமல் மக்களை உறங்கவைக்கும் காவல் துறையே!
இயற்கை இரவு தந்தாலும் இரவிலும் வெளிச்சமாக பணிப்புரியும் காவல் துறையே!
மக்களுக்கு நண்பணாகவும்!
மக்களுக்கு ஆசானாகவும்!
பெண்களுக்கு பாதுகாப்பானகவும்!
சிங்கத்தை பார்த்தால் பயம்மட்டுமே வரும்! ஆனால்
காவல்துறை சிங்கத்தை பார்த்தால் பயமும் வரும் பழகி பார்த்தால் பண்பு,பாசம்,அன்பு ஆகிய அனைத்தும் வரும் !
காட்டில் இருந்தாலும் சிங்கமே!
நடுரோட்டில் நடந்தாலும் சிங்கம் சிங்கமே!
காவல்துறை எப்போதும் நான்குமுக சிங்கமே
நன்றி வணக்கம்.