மார்த்தாண்டம் காவல் நிலைய பகுதிகளில் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை…!!!!
சிசிடிவி பதிவில் சிக்கிய கொள்ளையன்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பம்மம் பகுதியில் வாகன உதிரிபாகங்கள் விற்பனை மற்றும் ஸ்டிக்கர் கடைகளின் பூட்டை கடப்பாரை மற்றும் கம்பி உட்பட ஆயுதங்களை பயன்படுத்தி உடைத்து உள்ளே புகுந்து ஒரு கடையில் இருந்த 1,700 ரூபாய் மற்றும் செல்போன் மற்றொரு கடையில் இருந்த 2600 ரூபாய் உட்பட பணத்தை கொள்ளையடித்த கொள்ளையன் தனது செல்போன் லைட்டை ஒளிர விட்டு சிசிடிவி கேமரா இருக்கிறதா என்பதை பார்ப்பதையும் அதன் ஹார்ட் டிஸ்க் எங்கு உள்ளது என்பதை தேடுவதையும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி உள்ளது ஆனால் தற்போதைய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கடையின் உரிமையாளர் சிசிடிவி ஹாட் டிஸ்கை சமயோசிதமாக தூரத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து (தொழில்நுட்பத்தின் ரகசியம் காக்கும் பொருட்டு) அதை கண்காணித்து வந்துள்ளார் அதனால் கொள்ளை நாள் அந்த ஹார்ட் டிஸ்க்கை கொள்ளையடிக்க இயலாததால் கொள்ளையனின் உருவம் அதில் பதிவாகிவிட்டது. 4/7/2020 காலையில் கடைக்கு சென்ற கடை உரிமையாளர்கள் தங்களது கடையின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்திருப்பதை அறிந்து உடனே காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தனர் இந்த கடைகள் எல்லாம் அமைந்துள்ளது கன்னியாகுமரி களியக்காவிளை செல்லும் தேசிய நெடுஞ்சாலை 47 அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடம் வந்து கைரேகை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் அரசு விரைவு போக்குவரத்து கழகம் அருகில் உள்ள ஒரு கடையில் இதேபோல கடையின் பூட்டை உடைத்து அந்த ஸ்டிக்கர் கடையில் கொள்ளையன் புகுந்ததும் அங்கு இருந்த 100 ரூபாய் மட்டும் எடுத்துச் சென்றதும் அந்தக் கொள்ளையன் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று மேல் நடவடிக்கை இன்றி அந்தப் புகார் கைவிடப்பட்டதும் குறிப்பிடதக்கது. கடந்த பல மாதங்களுக்கு முன் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள நகைக்கடைகளில் தொடர் கொள்ளை நடந்து அதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதும் அந்த குற்றவாளிகள் கொள்ளையடித்த நகைகள் மீட்கப்பட்டதும் அந்த நகைகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது அப்போது புதிதாக தக்கலை உட் கோட்டத்திற்கு பதவி ஏற்றிருந்த தற்போதைய டிஎஸ்பி தலைமையிலான தனிப்படையினர் நகைகளை மீட்டதுடன் அந்த நகைகளை திரும்ப ஒப்படைக்கும் பொறுப்பை மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மூலம் சரிபார்த்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து நகைகளை பறிகொடுத்த நகைக் கடை உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த பல மாதங்களாக மார்த்தாண்டம் பகுதியில் கொள்ளை சம்பவங்கள் தடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் கொள்ளைச் சம்பவம் தலைதூக்கியுள்ளது கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் போலீசார் முறையான நடவடிக்கை எடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தற்போது அடையாளம் கண்டு விட்ட காரணத்தால் போலீசார் உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு