Police Department News

மதுரை, செல்லூர், மேலத்தோப்பில், நிறைமாத கர்பிணி பிரசவத்தில் மரணம், செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை, செல்லூர், மேலத்தோப்பில், நிறைமாத கர்பிணி பிரசவத்தில் மரணம், செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை மாநகர் செல்லூர் D2, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான செல்லூர் மேலத்தோப்பு, கொக்களத்தாச்சி சந்தில் குடியிருந்து வரும் சின்னன் மனைவி பவளக்கொடி வயது 45/21, இவரது மகள் வைதீஸ்வரி வயது 26/21, இவருக்கு ஏற்கனவே தனது உறவினர் மகன் திரு. மாசானம் என்பவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் செய்து கொடுத்திருந்தனர், இவர்களுக்கு கரிஸ்மா என்ற 7 வயது மகன் இருந்த நிலையில் இவரது கணவர் திருமணமாகி 3 வருடத்திலேயே குடிக்கு அடிமையாகி தூக்கிட்டு தற்கொலை செய்து இறந்து விட்டார் அதன்பின் 2 வருடம் கழித்து வைதீஸ்வரியை தனது உறவினரான மனோகரன் வயது 47/21, என்பவருக்கு 02/02/2012 ல் திருமணம் செய்து வைத்தனர் இவர் வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு ஏற்கனவே பிரியா என்பவருடன் திருமணமாகி கருத்துவேறுபாடு காரணமாக 2009ல் பிரிந்து விட்டனர். அதன் பிறகுதான் வைதீஸ்வரியை திருமணம் செய்து மதுரை குலமங்கலம் ரோட்டில் உள்ள கல்யாண சுந்தரம் 7 வது தெருவில் நல்லமுறையில் வாழ்ந்து வந்த நிலையில் இவர்களுக்கு கோபிநாத் வயது 5 என்ற மகன் இருந்த நிலையில் வைதீஸ்வரி இரண்டாவதாக கர்பமாகியுள்ளார். குழந்தை பிறக்க மதுரை கண்மாய் கரை மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவ மனையில் 23 ம் தேதி மாலை 4 மணிக்கு சேர்க்கப்பட்டு சிறிது நேரத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் வைதீஸ்வரியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர், ஆனால் அவர் போகும் வழியிலேயே உடல்நிலை மிகவும் மோசமாகி இறந்து விட்டார். தகவல் அறிந்த செல்லூர் D2, காவல்நிலையத்தில் ஆய்வாளர் திரு. அழகர் அவர்களின் உத்தரவின்படி, சார்பு ஆய்வாளர் திரு கனேசன் அவர்கள் வழக்கு பதிவு செய்து இறப்புக்கான காரணம் பற்றி விசாரணை செய்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.