
மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க வரும் மத்திய உள்துறை அமைச்சர்
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வருகை புரிகிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் நிலையில் நாளை காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். இதற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலத்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுவார்கள்.
