வக்கீலிடம் நகை பறித்த 5 பேர் கைது
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த வக்கீல் ஒருவர் மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள பாருக்கு நண்பர்களுடன் மது அருந்த சென்றார்.அங்கு மது அருந்தி முடித்த பின்னர் ஊழியர்களிடம் பில் கேட்டுள்ளார். அதில் அவர்களுக்கும் வக்கீல் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பார் ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் மது பாட்டிலால் தாக்கியுள்ளனர். மேலும் வக்கீல் அணிந்திருந்த 1½ பவுன் நகையை பறித்ததாக மாட்டுத்தாவணி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாறு ஊழியர்கள் பாண்டி செல்வம் (53)லட்சுமி காந்த் (40) முனீஸ்வரன் (30) முருகன் (57) விஷ்ணு ராஜா (29) ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.