மதுரை, தத்தனேரி மெயின் ரோட்டில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனம் காணவில்லை, செல்லூர் போலீசார் தேடி வருகின்றனர
மதுரை, செல்லூர், D2, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தத்தனேரி மெயின் ரோட்டில் ESI மருத்துவமனை எதிரில் ஒளிநிலா காம்பொவுன்டில் குடியிருக்கும் பஞ்சலிங்கம் மகன் புருசோத்தமன் வயது 21/21, இவர் ஆக்டிங் டிரைவராக பணி செய்து வருகிறார், இவர் தனது சொந்த உபயோகத்திற்காக இருசக்கர வாகனம் ஒன்று வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார், கடந்த 21 ம் தேதியன்று மாலை சுமார் 4.15 மணியளவில் மதுரை ஆலமரம் பஸ்ஸ்டாப் அருகில் உள்ள ABT மாருதிகார் ஷோ ரூம் காம்பொவுன்ட் சுவர் பக்கத்தில் தனது வாகனதகதை பூட்டி நிறுத்தி விட்டு சென்றுள்ளார். தன் வேலை முடித்து இரவு 9.15 மணிக்கு வந்து பார்த்த போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனம் காணவில்லை, இரண்டு நாட்கள் தொடர்ந்து அக்கம் பக்கங்களில் தேடியும் கிடைக்காததால் வண்டியின் உரிமையாளர் புருசோத்தமன் கடந்த 24 ம் தேதி, மதுரை செல்லூர் D2, குற்றபிரிவு காவல் நிலையத்தில் தனது தொலைந்து போன வண்டியை தேடி கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் ராதா அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு ஆண்டவர் அவர்கள் வழக்கு பதிவு செய்து வண்டியை தேடி வருகின்றனர்.