





மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீத்தடுப்பு நிகழ்ச்சி ஒத்திகை மூச்சுத் திணறலுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி? செயல்முறை விளக்கம் செய்து காட்டிய தீயணைப்பு துறையினர்
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா அடுத்த மாதம் ஏப்ரல் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது இதையொட்டி பட்டாபிஷேகம் திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அறிவுறுத்தலின்படி தீ விபத்து தடுப்பு பாதுகாப்பு பயிற்சி மற்றும் மருத்துவ முதலுதவி பயிற்சி குறித்து திருக்கோவில் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது கோவில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு இணை ஆணையர் கிருஷ்ணன் அவர்கள் முன்னிலை வகித்தார். மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஆரோக்கியதாஸ் மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை பணியாளர்களால் தீ விபத்து தடுப்பு பயிற்சி அவசர காலத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது
கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பொழுது பக்தர்களுக்கு திடீரென ஏற்படும் மூச்சுத் திணறல் மயக்கம் போன்றவற்றிற்கு எவ்வாறு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது என்பது குறித்தும் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்
இதில் கோவில் அயல் பணி கண்காணிப்பாளர்கள் பணியாளர்கள் ஒப்பந்த பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் மற்றும் அன்னதான பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்
