
சென்னை
சென்னையில் நகை பறிப்பு சம்பவங்கள் 50 சதவீதம் குறைந்துள்ளன: காவல் ஆணையர் விஸ்வநாதன்
Dec 12, 2019
சிசிடிவி பொருத்தப்பட்டதன் விளைவாக, சென்னையில் நகை பறிப்பு சம்பவங்கள் 50 சதவீதம் குறைந்திருப்பதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, காவலன் செயலி குறித்து மருத்துவ மாணவர்களுக்கு அவர் விளக்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவலன் செயலியை இதுவரை ஒன்றரை லட்சம் பேர் பதிவிறக்கம் செய்திருப்பதாக கூறினார். இணையதளத்தில் முகம் தெரியாதோரிடம் பேசுவது, புகைப்படம், வீடியோக்களை பகிர்வது போன்றவை குற்றங்களுக்கு வழி வகுக்கும் என்றும், ஆதலால் அத்தகைய செயலை தவிர்க்க வேண்டும் என்றும் விஸ்வநாதன் வலியுறுத்தினார்.