தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் சார்பாக கொரோனா பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
கருத்தரங்கம்நாடு முழுவதும் உள்ள கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் தொடர் தீ விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் இரண்டாவது முறையாக தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் உணவு விடுதியில் நடைபெற்றது.
இச்சிறப்பு கருத்தரங்கினை காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர். திரு. சி. சைலேந்திர பாபு, இ.கா.ப (இயக்குநர் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை) அவர்கள் துவக்கி வைத்து கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.
இதனையடுத்து மருத்துவமனைகளில் தீ தடுப்பு சாதனங்கள் மற்றும் அதன் பராமரிப்புகள் குறித்து கூடுதல் இயக்குநர் திரு. எஸ். விஜயசேகர் மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட அலுவலர்கள் உரையாற்றினர்.
இதில் சென்னையில் உள்ள 119 கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளிலிருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.