Police Department News

தமிழகத்தில் நாளை 15/05/21 முதல், மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 10 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது, டீ கடைகளுக்கு அனுமதி இல்லை.

தமிழகத்தில் நாளை 15/05/21 முதல், மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 10 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது, டீ கடைகளுக்கு அனுமதி இல்லை.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. என்றாலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. என்றாலும் மக்கள் நடமாட்டம் தெருக்களில் குறைந்த பாடில்லை. இதனால் இன்றில் இருந்து வெளியில் சுற்றும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நாளை முதல் கூடுததல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12 மணி வரை செயல்பட்டு வந்த காய்கறி, மளிகை, இறைச்சி கடைகளுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரை செயல்படவே அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகளுக்கான தடை உத்தரவு அப்படியே தொடரும். மேலும் தேனீர் கடைகளுக்கு அனுமதி இல்லை.

Leave a Reply

Your email address will not be published.