
வேலூர் மாவட்டம்¸ ராணிப்பேட்டை போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் ஆற்காடு – ராணிப்பேட்டை இணையும் மேம்பாலத்தில் உள்ள மணல் திட்டுகள் மற்றும் செடிகளால் அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாவதை அறிந்து அதனை தனியாளாக சுத்தம் செய்து வந்துள்ளார். அதனை கண்ட ஆட்டோ ஓட்டுநர்கள் போக்குவரத்து உதவி ஆய்வாளருடன் இணைந்து மேம்பாலத்தை தூய்மை செய்யும் பணியை செய்தனர். போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் ஆட்டோ ஓட்டுநரின் இச்செயல் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.