Police Recruitment

கடையநல்லூர் அருகே கருப்பாநதி பகுதியில் 4-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ – அணைக்க வனத்துறையினர் போராட்டம்

கடையநல்லூர் அருகே கருப்பாநதி பகுதியில் 4-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ – அணைக்க வனத்துறையினர் போராட்டம்

கடையநல்லூர் அருகே கருப்பாநதி அணைப்பகுதி யில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடுமையான வெயிலின் காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென மலையின் அடிவாரத்தில் காட்டுத்தீ பற்றி எரிய தொடங்கியது.

மழை குறைந்து வெயி லின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வரும் சூழலில் காட்டு தீ அங்குள்ள அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் உள்ளிட்ட வைகளுக்கும் பரவி எரிந்து வருகிறது.

கடந்த 3 நாட்களாக கருப்பாநதி அணைப்பகுதி யை ஒட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் தீப்பற்றி எரிவதால் 100 ஏக்கருக்கு மேலான வனப்பகுதிகள் எரிந்து நாசமாகியது. தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாக 4-வது நாளாக எரிந்து வரும் காட்டு தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

அந்த பகுதியில் உள்ள வனவிலங்குகள் அங்கிருந்து வெளியேறி வருகின்றன. அவை ஊருக்குள் புகாத வண்ணம் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வரும் சூழலில், வன உயிரினங்கள் எதுவும் தீ விபத்தில் சிக்காமல் இருக்கவும் அவர்கள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.