மதுரை காஜிமார் தெருவில் கொலை மிரட்டல் விட்ட நபர்கள் மீது திடீர் நகர் போலீசார் வழக்கு
மதுரை மாநகர், திடீர் நகர், C1, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான காஜிமார் தெரு மெயின் ரோட்டில் வசித்து வருபவர் இப்ராஹிம் மகன் மீராபக்ருதீன் முன்ஷி என்ற சகலைன் வயது 50/21, இவர் மதுரை காஜிமார் தெரு பள்ளிவாசல் மேனேஜிங் டிரஸ்டியாக கடந்த 4 வருடமாக இருந்து வருகிறார் இவர் கடந்த 2 ம் தேதி மாலை சுமார் 5.30 மணியளவில், மேனேஜிங் டிரஸ்டியாக இருக்கும் மற்றொரு நபர் சையது அஹமது இப்ராஹிம் ஆகியோர் இருவரும் காஜிமார் தெருவில் இருசக்கரவாகனத்தில் வந்து கொண்டிருந்த போது சம்பவ இடத்தில் சையது இப்ராஹிம் என்பவரும் பாபு, சரவணன், மற்றும் பெயர் தெரியா ஒரு நபரும் சேர்ந்து அரசு அனுமதி பெறாமல் BJP, RSS, முஸ்லிம் நபர்களை தாக்கியும், கலவரத்தை உண்டுபண்ணும் நோக்கத்தோடு மைக்கில் பேசிக்கொண்டிருந்தனர், அப்போது சகலைன், மற்றும் சையது முகமது இப்ராஹிம் இருவரும் சேர்ந்து மைக்கில் பேசிக் கொண்டிருந்தவர்களை தடுத்தனர், அதற்கு சையது இப்ராஹிம் என்பவர் தடுத்தவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டி அடித்து கீழே தள்ளிவிட்டு, கைகளால் அடித்தும் கால்களால் மிதித்தும் ஊமை காயங்களை ஏற்படுத்தினர், மேலும் இரும்பு கம்பியால் தாக்க முயன்ற போது அக்கம் பக்கதினர் அவர்களை தடுத்து அனுப்பி வைத்தனர் அதன்பின் சற்று நேரம் கழித்து பத்து நபர்களை அழைத்து வந்து உங்களை கொல்லாமல விடமாட்டோம் என கொலை மிரட்டல் விட்டு சென்றுள்ளனர் இதனை தொடந்து அவர்கள் மதுரை C1, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரை பெற்றுக்கொண்ட ஆய்வாளர் திருமதி. கீதாலெக்ஷிமி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. முருகேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
