Police Department News

கொரோனா முன்கள பணியாளர்களான காவல் துறையினருக்கு நோய்தடுப்பு தொகுப்பு வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம்:-

கொரோனா முன்கள பணியாளர்களான காவல் துறையினருக்கு நோய்தடுப்பு தொகுப்பு வழங்கப்பட்டது.

நாளுக்கு நாள் கொரோனா தொற்று தமிழகத்தில் சமீபத்தில் அதிகரித்து வருகின்றது.

அதன் விளைவாக நோய் தொற்றிலிருந்து பொது மக்களை காக்கும் தலையாய பணிகளில் தமிழக காவல் துறையானது முழுவீச்சில் ஈடுபட்டுவருகின்றது.

அந்த வரிசையில் அவர்களை காக்கும் வண்ணம் டாபே என்ற டிராக்டர் நிறுவனத்தின் மூலமாக சானிடைசர் மற்றும் முககவசம் அடங்கிய தொகுப்பினை அருப்புக்கோட்டை காவல் துறை துணை உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது.

அதன் தொடக்கமாக அருப்புக்கோட்டை காவல் துறை துணை கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் அவர்களுக்கும் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றும் காவலர்களுக்கும் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையம் மற்றும் அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலையம் அருப்புக்கோட்டை அனைத்து மகளீர் காவல் நிலையம் ஆகியவற்றில் ஆய்வாளர்கள் முன்னிலையில் அனைத்து காவலர்களுக்கும் சானிடைசர்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published.