பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை மாவட்ட காவல்துறையினர்.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுரையின் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மதுரை மாவட்டம் M.சத்திரப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பில் பயிலும் மாணவ மாணவியருக்கு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ சட்டம் குறித்தும் போதை பொருள் தடுப்பு குறித்தும் காவலன் எஸ் ஓ எஸ் செயலியின் பயன்கள் குறித்தும் பெண்கள் பாதுகாப்பு இலவச தொலைபேசி எண் 181 மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இலவச எண் 1098 குறித்தும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. அதில் சுமார் 200 மாணவ மாணவியர்கள் மற்றும் அப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவ் விழிப்புணர்வு முகாமில் மதுரை மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்ற விசாரணை பிரிவு ஆய்வாளர் திருமதி.P.சொர்ணலதா அவர்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் மற்றும் ஆட் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.R.பரமேஸ்வரி அவர்கள், M.சத்திரப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.கருணாகரன் மற்றும் பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.