Police Recruitment

தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த 2000 போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த 2000 போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கில் தேவையில்லாமல் வெளியே செல்பவர்களை கட்டுப்படுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 2000 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இன்று தூத்துக்குடியில் முக்கிய இடங்களான V.V.D.சிக்னல் சந்திப்பு மற்றும் தூத்துக்குடி F.C.I.ரவுண்டானா சந்திப்பு ஆகிய இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதுவரை விதியை மீறி வெளியே சென்றவர்கள் மீது 2674 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். 433 வாகனங்கள் பறிமுதல்.செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் ஊரடங்கை அமல்படுத்த ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அனைத்து சோதனைச் சாவடிகளிலும் 2000 போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காவல்துறையினரின் இப்பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று 21/05.21 தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் சந்திப்பு மற்றும் தூத்துக்குடி எப்.சி.ஐ.ரவுண்டானா ஆகிய பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டு தேவையில்லாமல் வருபவர்கள் குறித்து என்னென்ன காரணங்களை கூறி வெளியே வருகிறார்கள் என்பதை கேட்டறிந்து அவர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தேவையில்லாமல் வெளியில் வந்தவர்கள் 2674 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தும், 412 இரு சக்கர வாகனங்களை, 20 ஆட்டோக்களும் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் மீது வழக்குப் போடுவதோ, உங்கள் வாகனங்களை பறிமுதல் செய்வதோ காவல்துறையின் நோக்கமில்லை, கொரோனா வைரஸை ஒழிக்க வேண்டும் பொதுமக்களாகிய உங்களை அதன் தாக்கத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். ஆகவே பொதுமக்கள் தயவுசெய்து முக கவசங்கள் அணியுங்கள், அடுத்தவரிடம் பேசும் போது முடிந்த வரை 2 முககவசம் அணியுங்கள், எந்த நேரத்தில் வெளியே சென்றாலும் 6 அடி இடைவெளி கடைபிடியுங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் கைகளை அவ்வப்போது கிருமிநாசினி மற்றும் சோப்பு போட்டு சுத்தம் செய்யுங்கள். நீங்கள் இதில் அலட்சியமாக இருக்க வேண்டாம் பொதுமக்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இந்த வைரஸை அழிக்கமுடியும் என்பதை மனதில் கொண்டு செயலாற்றுங்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்

இந்நிகழ்வின் போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி அவர்கள் தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு கார்த்திக்கேயன் தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கனேஷ், உள்பட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.