சென்னை பெருநகர காவல் புனித தோமையர் மலை மாவட்டம் S16 பெரும்பாக்கம் காவல்நிலையம் 17.12.2020 திறப்பு விழா
திறப்பாளர் : மதிப்பிற்குரிய ஐயா திரு.மகேஷ்குமார் அகர்வால் I.P.S மற்றும் முன்னிலை : தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் மதிப்பிற்குரிய முனைவர் ஐயா திரு.R.தினகரன் I.P.S மற்றும் சென்னை பெருநகர இணை ஆணையாளர் ஐயா திரு.A.G.பாபு மற்றும் முனைவர் மதிப்பிற்குரிய ஐயா திரு.பிராபாகரன் (காவல்துறை ஆணையாளர்( புனித தோமையர் மலை மாவட்டம் தெற்குமண்டலம்) ஆகியோர் அனைவரும் காவல்நிலையத்தை திறந்ததையொட்டி பொதுமக்கள் மத்தியில் S 16 பெரும்பாக்கம் காவல் நிலையத்தின் ஆய்வாளராக ஐயா திரு.ரஞ்சித் ஆய்வாளர்(சட்டம் ஒழுங்கு) அவர்களின் பொறுப்பில் ஒப்படைத்தனர். ஐயா திரு.ரஞ்சித்குமார் ஆய்வாளர் அவர்கள் தன்னுடைய மக்களுக்கான காவல் பணியை சேவை என்று கருதாமல் தியாகமாக செய்வேன் என்றும் ஒவ்வொரு நடவடிக்கையும் புகாரின் அடிப்படையில் விசாரிப்பதோடு மக்களின் நலனுக்காகவே இரவு பகல் பார்க்காமல் தியாகமாக செய்வேன் என்று கூறியப்பின் திறப்பு விழாவை சிறப்பாக முடித்து அனைவரும் விடைப்பெற்று சென்றனர்.
