கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்து மாத்திரைகள் வழங்கிய மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு பணியிலும் ரோந்து பணியிலும் தொடர்ந்து சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர்.
மேலும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் IPS.. அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மாவட்ட காவல்துறையினருக்கு தொடர்ந்து கொரோனா தடுப்பு உபகரணங்களை (மாஸ்க், பாக்கெட் சானிடைசர், கையுறைகள், கபசுர குடிநீர் பொடி ) வழங்கி வருகிறார்கள்.
இதனடிப்படையில் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்து மாத்திரைகளை (orovit) திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் அனைவரும் பயன்பெறும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஏற்பாட்டில் திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) திரு சுப்பாராஜூ அவர்கள் அனைத்து உட்கோட்ட அலுவலகங்களுக்கும்,காவல் நிலையங்களுக்கும் இன்று வழங்கினார்.