திண்டுக்கல்லில் தென் மணடல ஐ.ஜி. ஆய்வு
திண்டுக்கல், பழனி சாலையில் உள்ள காய்கறி மார்கெட் மற்றும் பேரூந்து நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளில் காவல்துறை தென் மணடல ஐ.ஜி.அனபு அவர்கள் ஆய்வு செய்தார். தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பரவுவதை அடுத்து தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிரபித்து வருகிறது. அதன்படி கடந்த 10 ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியது.இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் வாங்கி செல்லலாம் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் இயங்கி வந்த காந்தி மார்கெட் அதிக
அளவு மக்கள் வருவதை அடுத்து திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக நான்கு பகுதிகளில் காய்கறி சந்தை இயங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தென் மண்டல ஐ.ஜி. அன்பு காய்கறி சந்தை அமைய உள்ள பேரூந்து நிலையம், மற்றும் பழனி சாலையில் உள்ள தற்காலிக காய்கறிகள் சந்தை உள்பட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல காவல்துறை தலைவர் அன்பு கூறும்போது தற்போது கொரோனா வைரஸ் தொற்றானது அதிக அளவில் பரவி வருகிறது. இதையடுத்து காவல்துறை சார்பாக கொரோனா வைரஸ் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இதில் பொதுமக்களுக்கு தற்போது இரண்டாம் நிலையானது மிகத் தீவிரமாக வருகிறது. என்று விழிப்புணர்வு பிரச்சாரமும் அதே போல் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.மேலும் கடந்த வாரம் வரை பொதுமக்கள் யாரும் காலை 10 மணிக்கு மேல் வெளியே தேலையில்லாமல் ஊரடங்கு நேரத்தில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சுற்றி வருபவர் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றோம். மேலும் ஊரடங்கை மீறி சுற்றி வரும் வாகனங்களை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது,
எச்சரிக்கை செய்வது என்றும் மேலும் பொதுமக்கள் யாரும் வெளியே வராமல் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.