திருவாடானையில் 7 டீ கேன்கள் பறிமுதல் 22 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை
தமிழகத்தில் பரவி வரும் கரோனோ வைரஸ் தொற்றின் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதில் காய்கறி மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறக்கலாம், தவிர மற்ற கடைகள் திறக்க கூடாது எனவும் அதிலும் டீக்கடைகள் திறக்கக் கூடாது என்ற விதி முறைகள் நடைமுறையில் உள்ளது.
அந்த விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் திருவாடானை வட்டாச்சியர் அறிவுறுத்தவின் படி அமைக்கப்பட்ட குழுவில் மண்டல துணை வட்டாட்சியர் சேதுராமன் தலைமையில் சார்பு ஆய்வாளர் முருகன், தலைமை காவலர் ஞானசேகரன், சுகாதார ஆய்வாளர் அருள், உள்ளிட்டோர் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை மங்களக்குடி, குருந்தங்குடி, ஊரணிக்கோட்டை, திருவாடானை, பகுதிகளில் மண்டல துணை வட்டாட்சியர் சேதுராமன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தபோது. 8 இடங்களில் டீ கடைகளில் டீ கேன்கள் வைத்து விற்பனை செய்தது தெரிய வந்து 7 கேன்கள், ஒரு பாய்லர் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் கடந்த இரண்டு நாட்களில் கொரோனோ வைரஸ் தொற்று பரவலை கட்டுபாட்டு விதிமுறைகளை மீறியதற்கு ரூபாய் 22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்த டீ கேன்களை திருவாடானை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தில்வேல் முருகனிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருவாடனை பகுதிகளில் இதேபோல் அதிகாலை நேரங்களில் டீ விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், காலையில் விற்பனை செய்தால் டீ கேண்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபாராதம் விதிக்கப்படும்.என்றும் எச்சரித்தனர்.