குழந்தைகள், புத்தி சுவாதீனம் இல்லாதவர்களை தற்கொலை செய்ய தூண்டுதல்
இந்திய தண்டனைச் சட்டம் -1860 பிரிவு 305
குழந்தைகள், புத்தி சுவாதீனம் இல்லாதவர்களை தற்கொலை செய்ய தூண்டுதல் பதினெட்டு வயதுக்குக் குறைந்தவர் அல்லது சித்த சுவாதீனம் இல்லாதவர் அல்லது புத்திக் கோளாறு உள்ள மயக்க நிலையில் இருப்பவர் அல்லது பிறவி முட்டாள்; அல்லது குடிபோதையில் உள்ளவர் ஆகியவர்களின் யாராவது தற்கொலை செய்து கொல்வதற்கு ஒருவர் உடந்தையாக இருப்பது குற்றமாகும். இந்தக் குற்றத்துக்காக மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் தண்டனையாக விதிப்பதுடன் அபராதமும் விதிக்கப்பட வேண்டும்.