Police Recruitment

மதுரையில் முழு ஊரடங்கு நடைமுறைபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் மூர்த்தி அவர்கள் மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் சுகுமாறன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.

மதுரையில் முழு ஊரடங்கு நடைமுறைபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் மூர்த்தி அவர்கள் மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் சுகுமாறன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.

மதுரையில் கோரிப்பாளயம் சந்திப்பில் இன்று நண்பகலில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துணை ஆணையாளர் தேவையின்றி செல்லும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுவருகிறது.
மேலும் போலீசார் மக்களிடம் கனிவாக பேசி விழிப்புணர்வு செய்து வெளியே வரவேண்டாம் என அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர் என கூறினார்.

இந்நிலையில் அவ்வழியே வந்த வணிகவரிதுறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களின் சந்திப்பில் கலந்து கொண்டு போலீசாரின் நடவடிக்கைகளை பாராட்டி ஊரடங்கு முழு வெற்றி பெற போலீசாரின் பணி மிக முக்கியம் என கூறினார்.

பேட்டியின் போது போக்குவரத்து உதவி ஆணையாளர்கள் திருமலைக்குமார் , மாரியப்பன், மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் சுரேஷ் ,ஜெய்சிங் ஆகியோர்உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.