மோட்டார் சைக்கிளில் இருந்து ரூ.1.30 லட்சம் திருட்டு
திருமங்கலம் சொக்க நாதன் பட்டி கப்பலூர் நடுத்தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ் (63). இவர் திருநகர் சீதாலட்சுமிமில் கேட் அருகே உள்ள ஒரு ஜூஸ் கடைக்குச் சென்றார். அப்போது அவர் பையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை மோட்டார் சைக்கிளில் வைத்து விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் காணாமல் போயிருந்தது. பணத்தை மோட்டார் சைக்கிளில் வைத்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவர் கடைக்கு சென்று திரும்பிய சிறிது நேரத்திற்குள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பவுன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் திருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.