Police Recruitment

பசிக்கிறதா? எடுத்துக் கொள்ளுங்கள்..கடையநல்லூர் காவல்துறையின் மகத்தான சேவை

பசிக்கிறதா? எடுத்துக் கொள்ளுங்கள்..கடையநல்லூர் காவல்துறையின் மகத்தான சேவை

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கும் விதமாக கடையநல்லூர் காவல்துறையினர் மற்றும் வன உயிர் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை இணைந்து கடையநல்லூரில் பசிக்கிறதா? எடுத்துக்கொள்ளுங்கள் என்ற திட்டத்தினை ஏற்பாடு செய்தனர்.இதனை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுகுண சிங் IPS இன்று துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் கடையநல்லூர் காவல் துறையினரின் இத்திட்டம் மிகவும் பாராட்டுக்குரியது இதேபோல் மாவட்டம் முழுவதும் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்க இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் கூறினார்.மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல் துறையினர் மற்றும் பத்திரிக்கை துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முக கவசம் மற்றும் சனிடைசர் வழங்கி, பணியின்போது முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்..

Leave a Reply

Your email address will not be published.