தூத்துக்குடி மாவட்டம்
விளாத்திக்குளம் உட்கோட்டம், சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 4 பேர் கைது – 459 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்
சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (23.05.2021) எஸ்.ஐ. திரு. ஹென்சன் பால்ராஜ் தலைமையிலான போலீசார் என். வேடப்பட்டி மற்றும் நாகலாபுரம் சந்தைப் பேட்டை ஆகிய பகுதிகளுக்கு ரோந்து சென்ற போது வேடப்பட்டியைச் சோந்த சண்முகதுரை மகன் மோகன்ராஜ் (36), உத்தண்டு மகன் உத்தண்டுசாமி (46) என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் ராமச்சந்திரன் (46) மற்றும் நாகலாபுரம் ரெட்டியபட்டியைச் சேர்ந்த ராமசாமி மகன் விஜயராஜ் (51) ஆகியோர் தங்கள் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
ஆகவே சங்கரலிங்கபுரம் போலீசார் அவர்களை கைது செய்து அவர்களது கடைகளிலிருந்து 459 தடைசெய்யப்பட்ட புகையிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.