மதுரை மாநகரில் 60 இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு
ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
136 வழக்குகள் பதிவு
50 வாகனங்கள் பறிமுதல்
கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க தமிழக அரசு ஒரு வாரத்துக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது முதல் நாளான நேற்று போக்குவரத்து போலீசார் நகரின் முக்கிய சாலைகளில் உள்ள சந்நிப்புகளில் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வந்தனர்.நகரில் முக்கிய பகுதியான கோரிப்பாளையம் சந்திப்பில் போலீசார் வாகனத் தனிக்கை மேற்கொண்டனர்.அப்போது போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு. சுகுமாரன் அவர்கள் நேரில் வந்து ஆய்வு செய்தார். அந்த நேரத்தில் விதிமுறைகளை மீறி வந்த வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். மேலும் தேவையில்லாமல் வெளியில் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர். அதன்பின் போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு. சுகுமாரன் கூறியதாவது. மதுரை மாநகர் முழுவதும் 60 இடங்களில் தடுப்புக்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தெவையில்லாமல் வெளியே வரும் வாகன ஓட்டிகளின் மீது வழக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் போதிய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மேலும் மதுரையில் தேவையின்றியும் , இ பதிவு இல்லாமலும் சென்றவர்கள் மீது 136 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் போக்குவரத்து காவலர்கள் 80 வழக்குகளும், சட்டம் ஒழுங்கு போலீசார் 56 வழக்குகளும் பதிவு செய்தனர். இது தவிர 51 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இனி வரும் நாட்களிலும் கண்காணிப்பு தீவிரமாக இருக்கும் என கூறினார்.