17 வயது, மைனர் பெண் தன் காதலனுடன், தலைமறைவு, புகாரளித்த 24 மணி நேரத்தில் இருவரையும் மீட்டுத்தந்த, சுப்பிரமணியபுரம், காவல் ஆய்வாளருக்கு , குவியும் பாராட்டுக்கள்
மதுரை மாநகர், சுப்பிரமணியபுரம் C2, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான பழங்காநத்தம், இருளப்பசாமி கோவில் தெருவில் வசிக்கும் முத்துப்பாண்டி என்பவரது மகள் மாலா வயது 17(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)என்பவர் கடந்த 14 ம் தேதி அன்று வெளியில் சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை என 15 ம் தேதி மதுரை சுப்பிரமணியபுரம் C2, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரே ஏற்றுக்கொண்ட காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கலைவாணி அவர்கள் துரிதமாக செயல்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டதில், அந்த பெண் பரமகுடியை சேர்ந்த சந்தோஷ்குமார் வயது 20, என்பவரை காதலித்து வந்ததாகவும், இருவரும் சேர்ந்து தலைமறைவாக உள்ளதை கண்டுபிடித்து, கோயம்புத்ததூரில் திருமணம் செய்ய முயற்சி செய்த அவர்கள் இருவரையும் மீட்டு மதுரை காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து , மாலா வயது 17 மைனர் என்பதால் முத்துப்பட்டியில் உள்ள மகளிர் காப்பகத்திலும் அவரின் காதலனான சந்தோஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பெண் காணவில்லை என புகார் கொடுத்து 24 மணி நேரத்தில் அப்பெண்ணை மீட்டுக் கொடுத்த காவல் ஆய்வாளர் திருமதி. கலைவாணி அவர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
