மதுரை மாவட்டம் மேலூரில் ஊரடங்கைபொருட்படுத்தாமல் வாகனங்களில் அலட்சியமாக சுற்றும் பொதுமக்கள்
வாகனங்களை பறிமுதல் செய்த மேலூர் துணை காவல் கண்காணிப்பாளர்
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவசரம், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்லும்மாறு அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் நகரில் போலீசார் பேரூந்து நிலையம் மற்றும் செக்கடி ஆகிய இரு இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அதிகளவு பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் அங்கும், இங்கும் அலைகின்றனர். மருத்துவ காரணங்கள் உள்ளிட்டவற்றை கூறி போலீசாரிடம் தகவல் அளித்தவாறே கடந்து செல்கின்றனர். இதனையடுத்து அங்கு வந்த மதுரை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ரகுபதிராஜா அவர்கள் சுற்றித்திரிந்த ஒவ்வொரு வாகனமாக மறித்து சோதனை செய்தார்.அப்போது பொய்யான காரணங்களை கூறி அடிக்கடி சாலையை கடப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் அங்கிருந்த நகராட்சி நிர்வாகத்தினரும் முக கவசம் அணியாமல் வலம் வந்த நபர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மேலூரில் 50 க்கு மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும் மேலும் மேலூர் பஸ் ஸ்டான்ட் மற்றும் முக்கிய இடங்களில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.