முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
ஜுன்மாதம் 7 ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு
மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களை காக்க இந்த முழு ஊரடங்கு ஜூன் மாதம் 7 ம் தேதி காலை 6 மணிவரை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடர்ந்து நடக்கும், மேலும் மளிகை பொருட்களை அந்தந்த பகுதிகளிள் உள்ள மளிகை கடைகள், வாகனங்கள் அல்லது தள்ளுவண்டியில் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்யலாம். ஆன்லைன் மற்றும் தொலை பேசி வழியாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. இது தவிர பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் ஜுன் மாதம் முதல் வழங்க கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் நலன் கருதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியே வருவதையும் கூட்டங்களையும் தவிர்க வேண்டும்.
கொரோனா மேலான்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடை பிடிப்பது கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் கிருமிநாசனியால் சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ மனைகனை நாடி மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும்.
மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்.