
லோக்சபா தேர்தல் நேரத்தில் வன்முறை மற்றும் குற்ற நிகழ்வுகளை தடுக்கும் பொருட்டு குற்றப்பதிவுள்ள நபர்களிடம் IPC 110 ன் கீழ் சுய நன்னடத்தை சான்று பெறும்படி போலீசாருக்கு டிஜிபி உத்தரவு
குற்ற வழக்குகளில் பதிவாகியுள்ள ரவுடிகளை தேர்தல் போன்ற சிறப்பு நிகழ்வுகளின் போது இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 110 ன் கீழ் வருவாய் கோட்டாட்சியர் சமன் அனுப்பி வரவழைத்து சுய நன்னடத்தை சான்று பெறுவது வாடிக்கை .அந்த சான்றுக்கு இருவர் சாட்சி கையெழுத்து இட வேண்டும் என்பது விதி ஓராண்டுக்கு இந்த சான்று உயிர்ப்புடன் இருக்கும்
சுய நன்னடத்துக்கான ஒப்பம் அளிக்கும் நபர் உறுதிமொழி அளிப்பதை மீறி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு எஃப் ஐ ஆர் பதிவானால் உறுதிமொழி அளிக்கப்பட்ட காலத்திலிருந்து குற்றம் பதிவு செய்யப்பட்ட காலத்தை ஓராண்டில் கழித்து மீதம் இருக்கும் காலத்தை தண்டனையாக அனுபவிக்க வேண்டும்
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தமிழக முழுவதும்
110 விதியின் கீழ் குற்றப்பதிவுள்ள ரவுடிகளை பிடித்து சுய நன்னடத்தை ஒப்பும் பெற உத்தரவிட்டுள்ளார் இதையடுத்து போலீசார் அதற்கான பணிகளில் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்
